ST. JOESPH HOSPICE PALESWARAM VILLAGE SALAVAKKAM(VIA) KANCHEEPURAM Dt. PINCODE 603 107 Tel: 044-27290781/27291061 MOBILE 93603 76678தினமணி :காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, ஆதரவற்ற முதியோர்களுக்கான கருணை இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.
சுமார் 300க்கும் மேற்பட்டோர் தங்க
வைக்கப்பட்டுள்ள அந்த ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இன்று காலை
கோட்டாட்சியர் ராஜூ தலைமையில் 80க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் சோதனையில்
ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்த
இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 முதியவர்கள் வரை மரணம் அடைந்துள்ளனர்.
இந்த இல்லம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்றவர்களை கொன்று அவர்களது உடலுறுப்பு
எலும்புகளை கடத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,
கடந்த ஜனவரியில் மட்டும் இந்த இல்லத்தில் 60 பேர் உயிரிழந்திருப்பதாக
அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆதரவற்றோர் இல்லத்தில்
உயிரிழப்பவர்கள் குறித்து முறையான தகவல் இல்லை.
அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு இல்ல நிர்வாகிகளிடம் இருந்து எந்த முறையான பதிலும் கூறவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
ஆதரவற்ற இல்லத்தில் ஒரு முதியவர்
உயிரிழந்தால் அது குறித்து அரசு மருத்துவமனையில் தெரிவித்து இறப்புச்
சான்றிதழ் பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்திடம் இறந்த நபர் குறித்து
விவரங்களை அளிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடமும் தெரிவிக்க
வேண்டும். இது எதையுமே இந்த இல்லம் செய்யவில்லை.
இறந்தவர்களின் உறவினர்களுக்கே 2
நாட்களுக்குப் பிறகுதான் தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம் என்பதும்
விசாரணையில் தெரிய வந்துள்ளது. இங்கிருப்பவர்கள் மட்டும் அல்லாமல், பிற
பகுதிகளில் இருக்கும் அனாதைகளையும் இவர்கள் அழைத்து வந்து வைத்துக்
கொள்வதால் சந்தேகம் வலுத்துள்ளது.
மேலும், அங்கே ஒரு கிடங்கு அமைத்து,
உயிரிழக்கும் முதியவர்களின் உடல்களை அந்த கிடங்கில் போட்டு வைத்து
விடுவதாகவும், அதன் பிறகு அந்த எலும்புகளை என்ன செய்கிறார்கள் என்பது
குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததன் பின்னணி:
கேட்பாரற்ற சடலத்துடன் காய்கறி வேனில் இரு முதியவர்களை ஏற்றி அனுப்பி சித்ரவதை செய்ததாக, கருணை இல்ல நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டி, சாலவாக்கத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே
உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, ஆதரவற்ற
முதியோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது.
இதன் கிளை இல்லம் தாம்பரத்தில் உள்ளது.
இந்த இல்லத்தில் இறந்த ஒருவரது சடலம், பாலேஸ்வரத்துக்கு ஈமச்சடங்கு
செய்வதற்காக காய்கறி ஏற்றிச் செல்லும் மினி வேனில் அனுப்பப்பட்டது.
இந்த வேனுடன், திருவள்ளூர் மாவட்டத்தைச்
சேர்ந்த அன்னம்மாள் (70), திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வராஜி (71) ஆகிய
இரண்டு முதியோர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாம்பரத்திலிருந்து
பாலேஸ்வரத்துக்கு வரும் வழியில் அன்னம்மாள், தன்னை காப்பாற்றும்படி
கூச்சலிட்டுக் கொண்டே வந்துள்ளார்.
மினிவேன் சாலவாக்கம் அருகே வந்தபோது
அன்னம்மாளின் அலறல் சப்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் சாலவாக்கம்
போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், மினிவேனை போலீஸார் மடக்கி
நிறுத்தினர். அதில் இருந்த அன்னம்மாள், செல்வராஜி ஆகியோரை மீட்டு, மினி
வேனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதில் ஏற்றி அனுப்பப்பட்ட சடலத்தை,
அதே காய்கறி வேனில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும்படி போலீஸார் கூறினர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அமரர் ஊர்தியை வரவழைத்து அதில் சடலத்தை அனுப்ப வேண்டும் என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து, காப்பகத்தின் மீது
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர்.
இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு
முதியவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கும், அன்னம்மாள், செல்வராஜி ஆகியோரை
சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி
வைத்தனர்.
இதுகுறித்து அன்னம்மாளின்
குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை மகள் வந்து அழைத்துச்
சென்றார். செல்வராஜி செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லம், அனாதையான சடலங்களுக்கு முறையான இறுதிச்
சடங்குகளைச் செய்வதில்லை. மாறாக, அவர்களது உடல் உறுப்புகளை எடுத்தும்,
அவர்களது எலும்புகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் செயலிலும் ஈடுபட்டு
வருகின்றனர்.
இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவு:
இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட
காப்பகம், முதியவர் இறந்தது, மூதாட்டி உள்பட இருவரை வேனில் சடலத்துடன்
ஏற்றி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். இதற்காக, கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த குழு
அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில்
செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்களை
பணத்திற்காக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த இல்லத்தில்
சோதனை நடைபெற்று வருகிறது. பாலேஷ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர்
இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 பேர் வரை மர்மமான முறையில் மரணமடைவதாக
புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கோட்டாட்சியர் ராஜுவின் தலைமையில் சமூக
நலம், சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 80-க்கும்
மேற்பட்டோர் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரியில் மட்டும் அந்த இல்லத்தில் 60 பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆதரவற்றோர் இல்லத்தில் இறப்பவர்களின் விவரங்கள் குறித்து முறையான தகவலை நிர்வாகம் தரவில்லை எனவும் ஆதரவற்றவர்களை கொன்று உடல் உறுப்பு மற்றும் எலும்புகளை கடத்துவதாக எழுந்த புகாரின்பேரில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
அதிகாரிகளுக்கு தெரிந்தது எப்படி?
செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் பார்ப்பதற்கு ஆம்புலன்ஸ் போல் வடிவமைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனம் ஒன்று அதிவேகத்தில் சென்றுள்ளது. அதிலிருந்த மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு அலறியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாகனத்தை அதிரடியாக மடக்கி நிறுத்தினர். பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தியதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் சத்தமிட்ட மூதாட்டியை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சாப்பாடு தருவதாக கூறி செயின்ட் ஜோசப் கருணையில்லத்துக்கு கடத்தி செல்வதாக மூதாட்டி தெரிவித்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸை திறந்து பார்த்தபோது, மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் துணியால் கட்டப்பட்ட சடலத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். போலி ஆம்புலன்ஸ், துணியால் சுற்றப்பட்ட சடலம், கடத்தப்பட்ட மூதாட்டி உள்ளிட்டவற்றை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திண்டுக்கல், இரும்புலியூர், பாலேஸ்வரம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு அதிகாரிகள் படை விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ST.JOSEPH'S HOSPICE
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகாமையில் மேட்டூர் கேட் என்ற
இடத்தில் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் கருணை இல்லத்தில் தற்போது 140
பெண்களும், 185 ஆண்களும் ஆக 325 ஆதரவற்ற அனாதை நோயாளிகள் உள்ளனர். ஒரு
வாரம் குறைந்த பட்சம் 5 பேர் இங்கு மனித மாண்போடு இறைவனடி செல்கின்றனர்.
இந்நாள் வரை 1179 நபர்கள் இங்கு இறைவனடி சென்றுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 5 வருடங்களாக ஏறக்குறைய 4200 நபர்கள் குணமடைந்து அவர்கள் விரும்பிய இடங்களுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள என்பது இவ்வில்லத்தின் சேவையை எடுத்துரைக்கிறது.
ஒரு நபர் இங்கு அழைத்து வரப்பட்டதும், முதலில் குளிக்க வைத்து அவர்களது முடி, சடைகளை எடுத்து, காயங்கள் பராமரித்து, மருந்தளித்த, மருத்துவ முதலுதவி வழங்கப்படுகிறது. அவர்களது கந்தலான உடைகள் அப்புறப்படுத்தி புதிய உடைகள் அணிவிக்கப்படுகிறார்கள். பின்பு அவர்களுக்கு மூவேளையும் நல்ல தரமான உணவு வழங்கப்பட்டு அழகிய சுற்றுப்புற சூழ்நிலையில் இறக்கும் தருணம் வரை பராமரிக்கப்படுகிறார்கள்.
ஒருவர் உயிர் நீத்தார்ரெனில் அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து, உரிய மரியாதைகள் செலுத்தி, மலர் தூவி உடலுக்கு இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறார்கள்.
இதுவரை மனநலம் பாதிக்கப்பட்ட 75 நபர்கள் மற்ற நபர்களுடன் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனர்.
88
வயது அருட்தந்தை மத்தாய் SJ,இ 85 வயது அருட்தந்தை ஆர். ஜார்ஜ்
sj.,அரட்தந்தை தாமாஸ்,அரட்தந்தை மார்ட்டின், மற்றும் அருட்சகோதரி.
நம்பிக்கை மேரியும் முன்வந்துள்ளனர்.
இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை, வருவோரின் மனதை கொள்ளை கொள்ளும். அந்நிறுவனத்தை பார்க்கவும், இங்குள்ள அறைகளில் தங்கிச் செல்லவும், தங்களை அன்போடு அழைக்கின்றோம். உங்கள் வருகையை முன்க்கூட்டியே தெரிவிக்க வேண்டுகிறோம்.
500 நபர்கள் உள்ள இரண்டாவது கருணை இல்லம் செங்கல்பட்டில் அமைத்து வருவதால் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். தங்களைப் போன்ற நல் உள்ளங்களின் உதவியை எதிர்நோக்கி உள்ளோம்.
காலை உணவிற்கு ரூ 4000/- மதிய உணவிற்கு ரூ 8000/- இரவு உணவிற்கு ரூ
3000/- மற்றம் மருத்துவ வசதிகக்கு நாள் ஒன்றுக்கு ரூ 2000/-
தேவைப்படுகிறது. (Receipt with 80G Income Tax Exemption)
பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விசேஷ வைபவங்களின் போது, ஆதரவற்றோரையும் மனதில் கொண்டு எங்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தினகரன் 2018-02-21@ 15:48:41
கடந்த ஜனவரியில் மட்டும் அந்த இல்லத்தில் 60 பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆதரவற்றோர் இல்லத்தில் இறப்பவர்களின் விவரங்கள் குறித்து முறையான தகவலை நிர்வாகம் தரவில்லை எனவும் ஆதரவற்றவர்களை கொன்று உடல் உறுப்பு மற்றும் எலும்புகளை கடத்துவதாக எழுந்த புகாரின்பேரில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
அதிகாரிகளுக்கு தெரிந்தது எப்படி?
செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் பார்ப்பதற்கு ஆம்புலன்ஸ் போல் வடிவமைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனம் ஒன்று அதிவேகத்தில் சென்றுள்ளது. அதிலிருந்த மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு அலறியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாகனத்தை அதிரடியாக மடக்கி நிறுத்தினர். பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தியதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் சத்தமிட்ட மூதாட்டியை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சாப்பாடு தருவதாக கூறி செயின்ட் ஜோசப் கருணையில்லத்துக்கு கடத்தி செல்வதாக மூதாட்டி தெரிவித்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸை திறந்து பார்த்தபோது, மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் துணியால் கட்டப்பட்ட சடலத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். போலி ஆம்புலன்ஸ், துணியால் சுற்றப்பட்ட சடலம், கடத்தப்பட்ட மூதாட்டி உள்ளிட்டவற்றை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திண்டுக்கல், இரும்புலியூர், பாலேஸ்வரம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு அதிகாரிகள் படை விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ST.JOSEPH'S HOSPICE
புனித ஜோசப் ஆதரவற்ற
இறக்கும் தருவாயிலுள்ள
அனாதைகள்
கருணை இல்லம்
இறப்பிற்கு முன்னாலான வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்நாள் வரை 1179 நபர்கள் இங்கு இறைவனடி சென்றுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 5 வருடங்களாக ஏறக்குறைய 4200 நபர்கள் குணமடைந்து அவர்கள் விரும்பிய இடங்களுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள என்பது இவ்வில்லத்தின் சேவையை எடுத்துரைக்கிறது.
ஒரு நபர் இங்கு அழைத்து வரப்பட்டதும், முதலில் குளிக்க வைத்து அவர்களது முடி, சடைகளை எடுத்து, காயங்கள் பராமரித்து, மருந்தளித்த, மருத்துவ முதலுதவி வழங்கப்படுகிறது. அவர்களது கந்தலான உடைகள் அப்புறப்படுத்தி புதிய உடைகள் அணிவிக்கப்படுகிறார்கள். பின்பு அவர்களுக்கு மூவேளையும் நல்ல தரமான உணவு வழங்கப்பட்டு அழகிய சுற்றுப்புற சூழ்நிலையில் இறக்கும் தருணம் வரை பராமரிக்கப்படுகிறார்கள்.
ஒருவர் உயிர் நீத்தார்ரெனில் அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து, உரிய மரியாதைகள் செலுத்தி, மலர் தூவி உடலுக்கு இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறார்கள்.
இதுவரை மனநலம் பாதிக்கப்பட்ட 75 நபர்கள் மற்ற நபர்களுடன் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனர்.
இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை, வருவோரின் மனதை கொள்ளை கொள்ளும். அந்நிறுவனத்தை பார்க்கவும், இங்குள்ள அறைகளில் தங்கிச் செல்லவும், தங்களை அன்போடு அழைக்கின்றோம். உங்கள் வருகையை முன்க்கூட்டியே தெரிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வில்லத்தின் நிறப்பம்சங்கள்:
தங்களைத் தாமே பராமரிக்க இயலாத மிகவும் உடல் நலம் அற்ற, முற்றிலும் அனாதை ஆனவர்களுக்குத் தான் இவ்வில்லம். ஜாதி, மதம், பால், வயது போன்ற வேற்றுமைகள் இங்கில்லை. பராமரிப்பதற்கென்று ஒரு மருத்துவர் இரு வாரத்திற்கு ஒருமுறை வருகிறார். அதோடு மனித நேயமும் சகிப்புதன்மையும் அதிகம் பெற்றுள்ள பல செவிலியர்களும் 24 மணி நேரமும் இங்கு பணியாற்றுகின்றனர். வீணாகும் பொருட்கள் அனைத்தம் மறு சூழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. எந்த அரசு உதவியும் இன்றி பொதுமக்கள் நன்கொடையால், மட்டுமே இவ்வில்லம் இயங்கி வருகிறது.500 நபர்கள் உள்ள இரண்டாவது கருணை இல்லம் செங்கல்பட்டில் அமைத்து வருவதால் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். தங்களைப் போன்ற நல் உள்ளங்களின் உதவியை எதிர்நோக்கி உள்ளோம்.
பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விசேஷ வைபவங்களின் போது, ஆதரவற்றோரையும் மனதில் கொண்டு எங்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
PLEASE SEND DD or cheque in favour of: "DIRECTOR ST.JOSEPH'S HOSPICE" BANK DETAILS: A/c No 0457053000005812 IFSC: SIBL0000457 SOUTH INDIAN BANK, CHENGELPET அனுப்ப வேண்டிய முகவரி ST.JOESPH'S HOSPICE METTER GATE P.O., KODAI ROAD(VIA) DINDIGUL DISTRICT TAMILNADU-624206 Tel: 04543-238686 MOBILE: 93603 76678/94420 30354/90472 30831
ST. JOESPH HOSPICE PALESWARAM VILLAGE SALAVAKKAM(VIA) KANCHEEPURAM Dt. PINCODE 603 107 Tel: 044-27290781/27291061 MOBILE 93603 76678 மேலும் விபரங்களுக்கு : அருட்தந்தை R.V. தாமஸ் நிறுவனர் இயக்குனர் புனித ஜோசப் கருணை இல்லம் மின் அஞ்சல்: fatherthamas1950@yahoo.com website: www.lightfortheblind.org.uk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக