திங்கள், 19 பிப்ரவரி, 2018

வங்கிகளில் இதுவரை 5200 பேர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.

வெப்துனியா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு வைர வியாபாரி நீரவ் மோடி தலைமறைவாகிவிட்ட நிலையில் பல வங்கிகளில் இதேபோன்ற மோசடி நடந்துள்ளது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு வங்கி ஊழியர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 5200 பேர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் எஸ்பிஐ வங்கியை சேர்ந்தவர்கள். இந்த வங்கியில் மட்டும் 1538 ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 449 ஊழியர்களூம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 184 ஊழியர்களும் இதில் அடங்குவர்.<

கருத்துகள் இல்லை: