பழுத்த அரசியல்வாதி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேனியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், "பிரதமர் கூறியதன் பேரிலேயே எடப்பாடி அணியுடன் ஒன்றாக இணைந்தேன். இணைந்தாலும் எனக்கு அமைச்சர் பொறுப்பு வேண்டாம், கட்சியில் மட்டும் பொறுப்பு வகித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் பிரதமர் வற்புறுத்தியதன் பேரிலேயே துணை முதல்வராகப் பொறுப்பேற்றேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின், டெல்லியில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது என்பதை பன்னீர்செல்வம் பேச்சு நிருபித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 18) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் பச்சை குழந்தை அல்ல, ஒரு பழுத்த அரசியல்வாதி. தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். அவர் பிரதமர் கூறியதால் இணைந்தேன் என்று கூறியிருப்பது ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.
ஏன் நீங்கள் இணைந்திருக்கக் கூடாது என்று நானே அதிமுகவின் தலைவர்களிடம் பலமுறை பேசியுள்ளேன். ஆனால் பிரதமர் மோடி இதுபோன்ற கருத்துக்களை நிச்சயமாக கூறியிருக்க வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக