தினத்தந்தி :சிரியா உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக, ரஷிய படைகளின் ஆதரவுடன் அதிபர் ஆதரவு படைகள் மூர்க்கமாக சண்டையிட்டு வருகின்றன.
பிப்ரவரி 23, 2018, 09:08 AM
பெய்ரூட்,
சிரியா உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக, ரஷிய படைகளின் ஆதரவுடன் அதிபர் ஆதரவு படைகள் மூர்க்கமாக சண்டையிட்டு வருகின்றன. கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 18–ந் தேதி இரவு முதல் அந்தப் படைகள் தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்தன. 5 நாட்களாக நடந்த தாக்குதலில் 403 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலியானவர்களில் 95-க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக