தினமலர் :கனடா பிரதமர் மனைவி சோஃபி, பயங்கரவாதி, ஜஸ்பால் அத்வால், கனடா பிரதமர் ஜஸ்டின் , சீக்கியர், மும்பை : இந்தியா வந்துள்ள கனடா பிரதமரின் மனைவி சோஃபி, தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சீக்கிய அமைப்பின் உறுப்பினராக இருப்பவர் ஜஸ்பால் அத்வால். இவர், 1986 ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இவருடன் தற்போது இந்தியா வந்துள்ள கனடா பிரதமரின் மனைவி போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.
மும்பையில் பிப்.,20 ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோஃபி, அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜஸ்பாலுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டினுடன் டில்லியில் நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளவும் ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மும்பையில் தொழில் தொடர்பான வேலை உள்ளதால் தன்னால் டில்லியில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள முடியாது என ஜஸ்பால் பதில் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக