புதன், 21 பிப்ரவரி, 2018

BBC : சிரியா 100 பேர் உயிரிழப்பு ..அரசுப்படை தாக்குதலில் பொது மக்கள் குறைந்தது

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.<> 2013ஆம் ஆண்டு முற்றுகைக்கு பின்னர் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் கொடூரமான நாட்களில் திங்கள்கிழமையும் ஒன்றாகும்.
செவ்வாய்க்கிழமை காலையும் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டு வருவதாக “ஒயிட் ஹெல்மட்” என்று அறியப்படும் சிரியா பொது மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு கூட்டா தலைநகருக்கு அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கடைசி குடியிருப்பு பகுதியாகும். இந்த பகுதி முழுவதும் அரசு கட்டுபாட்டு பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.


;கிழக்கு கூட்டா பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த காணொளியின் காட்சிகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். டூமா, மிஸ்ராபா மற்றும் அல்-நாஷபியாவில் நடத்தப்பட்டுள்ள புதிய வான்வழி தாக்குதல்களில் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்கள் என்கிற கிளர்ச்சியாளர் செயற்பாட்டாளர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, மிஸ்ராபாவில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அல்-மர்ஜில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் “ஒயிட் ஹெல்மட” தெரிவித்திருக்கிறது.
பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான “சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்” மற்றும் “ஒயிட் ஹெல்மட்” இரண்டும் இணைந்து திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

;போர் நிலைமை கட்டுப்பாடின்றி செல்வதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அதிகாரி ஒருவர், தக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நான்கு லட்சம் பேர் வாழுகின்ற கிழக்கு கூட்டா பகுதி கடந்த சுமார் 3 மாதங்களில் கடந்த வாரம்தான் முதலுதவி பொருட்கள் சென்றடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: