திங்கள், 8 ஜனவரி, 2018

பொன்னையன் : ஜெயலலிதாவை சசிகளை ஆணிகட்டையால் தாக்கினார் ... கன்னத்தில் உள்ள அடையாளம் அதுதான்

கொல்லவில்லை என்பதற்காக... Lakshmi Priya- Oneindia Tamil சென்னை: ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் ஆணி கட்டையால் தாக்கியதால்தான் அவரது கன்னத்தில் மூன்று ஓட்டைகள் விழுந்துள்ளன என்று அதிமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.
 ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் எழுந்தன. இதையடுத்து அவரது மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சி நிறுவனத்தின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறுகையில், தினகரனுக்கும், சசிகலா குடும்பத்தினருக்கும் சிக்கல்களை தர கூடியதுதான்


ஆர்கே நகரில் அவர் பெற்றிருக்கும் இந்த வெற்றி. சூழ்ச்சி நிறைந்த வெற்றி. சட்டமன்ற இடைத்தேர்தலில் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வெற்றி பெற்று விடலாம் என்பதை தினகரன் இந்த உலகத்துக்கு நிரூபித்து விட்டார். டிடிவி தினகரன் அதிமுகவின் வாரிசும் இல்லை. அக்கட்சியின் உறுப்பினரும் இல்லை. இதுதான் அடிப்படை உண்மை. அதிமுகவின் வாரிசு என்பது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் பொதுக் குழு மூலம் யாரை தேர்ந்தெடுக்கிறதோ அவர்தான் வாரிசு.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் பணம் தரவில்லை. ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர் என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டோம். டிடிவி தினகரன் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ, உண்மையா இல்லை போலியா என்பதை விசாரணை கமிஷன் ஆய்வு முடிவு செய்யும். நாங்கள் செய்தது சவப்பெட்டி அரசியல் அல்ல.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர். எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்துள்ள அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நிலை 60 சதவீதம் பாதிக்கப்பட்டு மீளா முடியாத அளவிற்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே ஆகிவிட்டது. ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்று ஒரு வீடியோவை வெளியிட்டால் சாதகமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கவும், அவரை கொன்றுவிட்டார்கள் என்று கூறும்போது கூட தாங்கள் கொல்லவில்லை என்று கூறும் ஒரு நிலையை அவர்கள் ஏற்படுத்தினர்.

அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும்போதே ஜெயலலிதா உயிரற்ற நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை கையெழுத்து போட சசிகலா சசிகலா குடும்பத்தினர் கேட்டனர்.

அவர் மறுத்ததால் அவரை ஆணி கட்டையால் தாக்கினர். அதனால்தான் ஜெயலலிதாவின் கன்னத்தில் 3 புள்ளிகள் இருந்தது என்பது வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகியவற்றில் வந்ததை வைத்துதான் நான் சொன்னேன் என்றார் பொன்னையன்

கருத்துகள் இல்லை: