தினத்தந்தி :ஆதாருக்கு பதில் புதிய அட்டை வழங்குவதாக கூறப்பட்டு இருப்பது ‘குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவதை போன்றது’ என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு இந்த அட்டை பயன்படுத்தப்படுவதால், அதில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. எனவே இதை தவிர்க்கும் நோக்கில் 16 இலக்க எண்ணுடன் கூடிய புதிய ‘மெய்நிகர் அடையாள அட்டை’ விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
மத்திய அரசின் இந்த திட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குறைகூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘மத்திய அரசின் கட்டாயத்தின் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் தகவல்களை பல சேவை நிறுவனங்களுடன் பகிர்ந்து விட்டனர். இனி புதிய பாதுகாப்பு அடுக்கை அறிமுகப்படுத்துவது என்பது, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவது போன்றதாகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக