மாலைமலர் :உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக
நான்கு நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், ஜனநாயகத்திற்கு ஆபத்து
என்ற நீதிபதிகளின் கருத்து முக்கியமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தி கூறியுள்ளார்.
"தலைமை நீதிபதி மீதான மற்ற நீதிபதிகளின் கருத்து மிக முக்கியமானது: ராகுல் காந்தி" "தலைமை நீதிபதி மீதான மற்ற நீதிபதிகளின் கருத்து மிக முக்கியமானது:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், லோகுர் ஆகிய நால்வரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும் என்று நால்வரும் கூட்டாக பேட்டியளித்தனர். நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்ட மந்திரி ரவிஷங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது, மூத்த நீதிபதிகள் முன் வைத்திருக்கும் கருத்துகள் மிக முக்கியமானவை. ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற நீதிபதிகளின் கருத்து மிகவும் முக்கியமானது. நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர்.
அமித்ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோதா மரணம் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
என்று கூறியுனார்.
மேலும், நான்கு நீதிபதிகளின் பேட்டியை வரவேற்றுள்ள சமூல ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறும் போது, சில நீதிபதிகளுடன் வெளியில் இருந்து சிலருக்கு தொடர்பு இருப்பதை இது காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக