ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர மனம் உள்ளது; பணம் இல்லை: செங்கோட்டையன்

tamilthehindu :போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர அரசுக்கு மனம் உள்ளது, ஆனால் அதற்கு போதுமான நிதி இல்லை என தமிழக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நான்காவது நாளாக இன்றும் (ஞாயிறு) தொடர்வதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து
தொழிலாளர்களின் போராட்டம் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க தமிழக அரசுக்கு மனம் உள்ளது. ஆனால், தமிழக அரசு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் தவிக்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் அளவிற்கு சம்பளம் தர மனம் இருந்தும் பணம் இல்லை. அரசின் நிலைமையை உணர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை: