செவ்வாய், 5 டிசம்பர், 2017

சரத் யாதவ் , அலி அன்வர் அன்சாரி எம்பி பதவிகளை தகுதி நீக்கம் செய்த துணை குடியரசு தலைவர் வெங்கையா!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் இருவரது ராஜ்யசபா எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லோக்சபா தலைவர் ஆர்.சி.பி.சிங், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார் இந்த புகார் மீது விசாரணை நடத்திய துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10-ன் கீழ் சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகிய இருவரையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்த தகுதிநீக்க அறிவிப்பு நேற்று ராஜ்யசபாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.வெப்துனியா

கருத்துகள் இல்லை: