செவ்வாய், 5 டிசம்பர், 2017

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!! ஆர் கே நகர் இடைதேர்தலில்

Mayura Akilan - Oneindia Tamil ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!- வீடியோ சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. சுயேட்சைகள் மனுக்கள் தள்ளுபடி சுயேட்சைகள் மனுக்கள் தள்ளுபடி திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விஷால் மனுவுக்கு எதிர்ப்பு விஷால் மனுவுக்கு எதிர்ப்பு நடிகர் விஷால் வேட்புமனுவை ஏற்பதில் தொடக்கம் முதலே குழப்பம் நீடித்தது.
விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிறுத்தி வைப்பு நிறுத்தி வைப்பு விஷால் மனுவில் சொத்து கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் கூறினார். இதனையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. நிரப்பவில்லை என குற்றச்சாட்டு நிரப்பவில்லை என குற்றச்சாட்டு இதனிடையே தீபாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். 
அவரது வேட்புமனுவில் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என கூறப்பட்டது. டூப்ளிகேட் கையெழுத்து டூப்ளிகேட் கையெழுத்து பின்னர் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளது
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: