வெள்ளி, 8 டிசம்பர், 2017

சேகர் ரெட்டி ஊடக கூலிகளுக்கு மாதாமாதம்.... ரங்கராஜ் பாண்டே , ஹரிஹரன்,தன்யா ராஜேந்திரன் ,கார்த்திகை செல்வன்

Steephan Raj : ரங்கராஜ் பாண்டவேம், ஹரிஹரனும் எச்சை பொறிக்கிகள் பணத்துக்கு ஊடக தர்மத்தை விற்றவர்கள் என்று நன்றாக தெரியும் ஆனால் " கார்த்திகை செல்வன் " ? இனிமே 7 மணிக்கு மேல நியாயம் தர்மம்னு ஏதாவது பேசுனீங்க ................பிஞ்சிடும் ! தன்யா ராஜேந்திரன் இதெல்லாம் ஒரு பொழப்பு ? இந்த அடிமை கூட்டத்துகிட்டேயே இவ்வளவு வாங்கி இருக்காணுங்க பிஜேபிகிட்ட எவ்வளவு வாங்கி இருப்பானுங்க ?

தினமலர் நெல்லை :சென்னை: சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து வருமானவரித்துறை கைப்பற்றிய டயரின் ஒரு பகுதியை “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி வெளியிட்டது. அந்தப் பக்கங்களின்படி எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவை முழுக்க சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறியது. துணை முதல்வர் ரூ. 2.5 கோடி பணம் பெற்றதாகவும் தனியார் தொலைக்காட்சி செய்தியில் கூறப்பட்டது. இந்தச் செய்தியின் அடிப்படையில் அதிமுக அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் இன்று கோரினார்.


திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை பற்றி தமிழ் தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விகளுக்கு சேகர் ரெட்டி பதிலளித்தார். வருமானவரித் துறை கைப்பற்றியதாகக் கூறப்படும் “டயரி” பற்றிக் கேட்டபொழுது, டயரி எழுதும் பழக்கம் எனக்கு இல்லை, தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தாள்களில் உள்ள எழுத்து என் எழுத்து அல்ல. எங்கள் வீட்டில் இருந்து டைரி கைப்பற்றப்பட வாய்ப்பே இல்லை என்றும் சேகர் ரெட்டி தெரிவித்தார். என் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று நம்புகிறேன். நான் தவறு செய்திருந்தால் எனக்கு தண்டனை கிடைக்கப்போகிறது. எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் என சேகர் ரெட்டி கூறினார்.

தமிழக அமைச்சர்களுக்கு பணம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்பொழுது, நான் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்? தொழிலை முறைப்படி நடத்துகிறேன். எங்கள் கம்பெனியில் 500 லாரிகள், 300 பொக்லைன்கள், 100 மண்வாரி எந்திரங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் தொழில் நடத்துகிறேன்.

பண வர்த்தனைகள் எல்லாம் செக் மூலம், பேங்க் மூலம் முறையாக நடத்துகிறேன். எல்லாம் வெள்ளை தான். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு இடமே இல்லை. அட்வான்ஸ் வரி கட்டுகிறோம். காலம் முடிந்ததும் கணக்குப் பார்த்துவிட்டு இன்னும் கட்டவேண்டும் என்றால் கட்டப்போகிறோம். நாங்கள் கட்டியதில் மிச்சம் இருந்தால் திரும்ப வாங்கப் போகிறோம். இந்நிலையில் யாருக்கு, ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்றார் சேகர் ரெட்டி.

கருத்துகள் இல்லை: