வியாழன், 7 டிசம்பர், 2017

தினகரனுக்கு பிரஷர் குக்கர் .. விஷாலுக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு ?

தினகரன் : தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க மறுத்து பிரஷர் குக்கர் வழங்க பட்டது . எதிரிகளுக்கு பிரஷர் ஏற்றவே அது தனக்கு வழங்க பட்டதாக வேடிக்கையாக குறிப்பிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலின் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியா :விஷாலின் வேட்புமனு நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து தனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை மனுவை கொடுத்தார். ஆனால், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சரிதான் என அவரும் கை விரித்து விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், விஷாலை முன் மொழிந்து பின் மறுத்த 2 நபர்களும் இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, தாங்கள் மிரட்டப்பட்டது குறித்து விளக்கம் அளித்தால் விஷாலின் மனு மறுபரீசிலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மனுவை வாபஸ் பெற இன்று மாலை 3 மணிதான் கெடு. எனவே, அதற்குள் அவர்கள் இருவரையும் விஷால் தரப்பு தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும். இல்லையேல், இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.">விஷாலுக்கு மீண்டும் தேர்தல் அதிகாரி வாய்ப்பளித்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை: