புதன், 6 டிசம்பர், 2017

வைகோ திமுகவுடன் சேர்ந்து பணி.... தொண்டர்கள் எதிர்பார்ப்பு?

Damodaran : வைக்கோ ஆதரவை - வாழ்த்தி வரவேற்போம்.
தமிழகத்தின் மீது ஆரிய படையெடுப்பு உக்கிரம் அடைந்துள்ள இவ்வேளையில், திராவிட இயக்க கொளகைகளை காப்பற்ற, தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க தன்மானத்தை காப்பாற்றிக்கொள்ள பெரியாரின் அனைத்து பிள்ளைகளும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை ஆசைகளை சுயநலத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு, முழுமனதோடு ஒன்றுபட்டு போராடுவது மிக மிக அவசியம்.
அந்த நோக்கில் வைக்கோ அவர்களின் ஆதரவை மகிழ்ச்சியோடு வரவேற்கலாம். வைக்கோ உணர்ச்சிவசப்பட்டு ஒருநாள் கலைஞரை வானுயர புகழ்வார்,கண்கலங்குவார். மறுநாளே கலைஞரை கூசாமல் வசைபாடுவார்என்பது உண்மை தான். ஆனால் அவர் இன்று சரியான பாதைக்கு திரும்பிவந்துள்ளார் இந்த நிலைப்பாட்டில் வைக்கோ நிலைத்து நிற்கட்டும் அவரை தன் தலை மேல் சுமக்க ஒவ்வொரு திமுக தொண்டனும் தயாராகவே இருக்கின்றான்..நல்லது தொடரட்டும். வைக்கோ ,பெரியார் கண்ட திவிட கொள்கைகளையும் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னத்தையும் கட்டிக்காக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு ...தன்னிலை மாறாமல் ..தாய் கழகத்தோடு கைகோர்த்து பயணிக்கவேண்டும் என்பதே எல்லோருடைய கனவுமாகும்
. கடந்த காலத்தை மறப்போம். தமிழினத்தின் உரிமை நலன்களை காப்போம் வைக்கோ திமுகவின் பீரங்கியாக பாராளுமன்றத்தில் முழங்குவதை மீண்டும் கேட்க ஆசைப்படுகிறோம். நல்லது நடக்குமென்று நம்புவோம் தளபதியின் ஸ்டாலின் அவர்களின் அரசியல் சாணிக்கியத்தை பண்பட்ட அரசியல் முதிர்ச்சியை தன்னடக்கத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை வாழ்க திமுக

கருத்துகள் இல்லை: