சனி, 9 டிசம்பர், 2017

அமேசான் கொடுக்கும் தொழில்நுட்ப மந்திர சாவி !

Karthikeyan Fastura :நேற்று எங்களுக்கு 6.4 லட்ச : ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் புதையல் கிடைத்தது. அமேசான் Cloud Serviceஆன AWS 10000 டாலர்களுக்கு Credit செய்துவிட்டிருக்கிறார்கள்.
ஸ்டார்ட்அப் உலகில் இது மிகப் பெரிய வரம். இந்த Programக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைத்துவிடாது. பல விண்ணப்பங்கள் நிராகரிப்படும். உண்மையிலேயே இந்த ஸ்டார்ட்அப் மதிப்பு மிக்கதா, இதன் தயாரிப்புகள் எப்படி என்று அலசி ஆராய்ந்து தான் இதை கொடுப்பார்கள்.
இதை போன்றே மிக முக்கியமான இன்னொரு Program Microsoft Bizspark. 2015ல் இதிலும் நாங்கள் தேர்வானோம். அதனால் மாதம் 150$ க்கு Credit வீதம் ஒரு ஸ்டார்ட்அப் டீமில் உள்ள ஐவருக்கு இதை வழங்குவார்கள். அதைவைத்து அவர்கள் Microsoft Cloud Service Products எதை வேண்டுமென்றாலும் வாங்கலாம். மேலும் அவர்களது பல லட்சம் பெறுமானமுள்ள மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். எங்களுடைய நிறுவனத்தில் உள்ள Windows OS, MS Office, Dot Net என்று எல்லாமே ஒரிஜினல் வெர்சன். Pirated கிடையாது. மேலும் டேட்டாபேஸ், செர்வர் என்று எல்லாமே இலவசம். ஐநூறு வெப்சைட்டுகள் வரை ஏற்ற முடியும். அவ்வளவு இடம் கொடுத்தார்கள்.
நாங்களும் அதை மிக சரியாக பயன்படுத்தினோம். இன்னும் பயன்படுத்தி இருக்கலாம் முதலீடு கிடைத்திருந்தால். இப்போது இந்த சர்வீஸ் வரும் மார்ச் 2018 உடன் நிறைவுபெறுகிறது.
இந்த வருத்தத்தில் இருந்தபோது தான் வராதுவந்த மாமணியாக அமேசான் AWS கிடைத்திருக்கிறது. நேற்று இரவு ஒன்பதரைக்கு தான் மெயில் வந்தது. உள்ளே சென்று நோண்டி பார்த்தால் வாய் பிளக்க வைக்கிறார்கள். International SMS கிடைக்காமல் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு Whatsapp பண்ணிக்கொண்டிருந்தோம். அதை மட்டுமல்ல உள்ளூர் SMS, Push Notification, Bulk SMS
Machine Learning Tools ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க பரவசம்தான். உங்க நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு வரும் ஈமெயில்லை படித்து அதை அந்தந்த துறைக்கு அனுப்பி பதில் வாங்கி மீண்டும் வாடிக்கையாளர்க்கு அனுப்பி வைப்பதை ஒரு பெரிய டீம் வைத்து செய்யவேண்டும். இதை இவை மிக எளிதாக்குகிறது. பக்கம் பக்கமாக அடிக்கவேண்டிய கோடிங் எல்லாம் சிலவரிகளில் முடித்துவிடுகிறது.
Tradingல் எக்கச்சக்க டேட்டா வந்து கொட்டும். புதிய புதிய செய்திகள் வேறு மார்கெட்டின் போக்கை மாற்றும். இதையெல்லாம் படித்து புரிந்து இதை வாங்கலாம் இதை விற்கலாம் என்று முடிவு செய்வார்கள் நிதி ஆலோசகர்கள். இந்த செய்திகளை (RSS Feed வழியாக கிடைக்கும் செய்திகளை) படித்து தங்கம் ஏறலாம் என்று முடிவுக்கு வந்து, அதை Technical Analysis செய்து அதனுடன் ஒப்பிட்டு அதுவும் அதே முடிவை கொடுத்தால் தங்கம் வாங்குங்கள் என்று சொல்ல ஒரு மென்பொருளை AWS Machine Learning மூலம் வடிவமைக்கலாம். எங்கள் எதிர்கால திட்டங்களில் இதுவும் ஒன்று.
இப்படி மனித மூளை செய்யும் Reading, Aggregating, Listening, Analyzing போன்ற நுண்ணறிவு செயல்களை செய்ய இது உதவுகிறது.
இவை மட்டுமல்ல
Networking and Content Delivery
Augmented Reality and Virtual Reality
வெப் ஸ்டோரேஜ்
Analytics
Desktop Streaming என்று என்னை கவர்ந்த விஷயங்கள் நிறைய. இவையெல்லாம் ஒரு பெரிய டீம் வைத்து உருவாக்க வேண்டிய தொழில்நுட்பங்கள். இப்போது இவை அனைத்தும் தயாராக இருக்கிறது.
மிக எளிதாக சொல்கிறேன். இன்று என் கையில் இணையத்தின் அத்தனை தொழில்நுட்பங்களும் இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி மக்களுக்கு, நிறுவனங்களுக்கு தேவையான என்ன Product வேண்டுமென்றாலும் செய்யலாம். அதுவும் மிக எளிதாக, விரைவாக. ஏற்கனவே என்னென்ன Product செய்யவேண்டும் என்பதில் தெளிவான திட்ட வரிசை எங்களிடம் இருக்கிறது. ஒற்றை ஆளாக இதை செய்ய முடியாது. தேவை ஒரு டீம் மற்றும் குறிப்பிடத்தக்க முதலீடு அவ்வளவே. வெகுவிரைவில் அதுவும் கிடைக்கும்.
ஒரு விசயத்தில் உங்கள் கவனம் முழுவதையும் செலுத்தி, விடா முயற்சியுடன் உழைக்கும்போது உங்களுக்கு வேண்டிய அனைத்தும் தன்னாலே வந்து சேரும். இது மந்திரமோ, மாயமோ, புண்ணியமோ, தெய்வத்தின் அருளோ அல்ல. இயற்கையின் விதி. இந்த பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்த அதே விதி. இதற்கு பக்தியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையுடன் மகிழ்ச்சியுடன் தெளிவான கனவுடன் இருந்தாலே போதும்.

கருத்துகள் இல்லை: