புதன், 6 டிசம்பர், 2017

சுருதி ஹாசன் காதலுனுடன் சரிகா,,,, கமலஹாசன்

மின்னம்பலம்: நடிகர் கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசன் காதலரான லண்டனை சேர்ந்த மைகேல் கார்சலேவும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மருமகனுடன் கமல்கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த நடிகர் மைகேல் கார்சலே என்பவரை காதலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்த நிலையில் கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமணம் சென்னையில் நேற்று (டிசம்பர் 5) நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் வருகை தந்திருந்தார். ​
விழாவுக்கு வருகை தந்திருந்த கமலிடம் ஸ்ருதிஹாசன் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் வருங்கால மருமகன் மைகேல் கார்சலே ஆகியோருடன் கமல் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது.அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மைக்கேல் கார்சலைத் தனது தாயார் சரிகாவிடம் ஸ்ருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படமும் வெளியானது. சமீபகாலமாக ஸ்ருதிஹாசன் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாத நிலையில் மைக்கேல் கார்சலே-ஸ்ருதிஹாசன் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: