வியாழன், 7 டிசம்பர், 2017

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்!

Mathi - Oneindia Tamil நியூயார்க்: ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்த முதலாவது நாடு அமெரிக்கா. 1967-ம் ஆண்டு யுத்தத்தின் போது கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இதை உலக நாடுகள் ஏற்கவில்லை.  இதையடுத்து இஸ்ரேல் தலைநகராக டெல் அவிவ் இருந்து வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் தமது நாட்டின் தலைநகரை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக அறிவித்தது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த எதிர்புகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அதிபர் டிரம்ப் இன்று அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகையில் அறிவித்தார். மேலும் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தக் கூடிய அமெரிக்காவின் நிலையில் இருந்து விலகிய ஒன்றாக தற்போதைய நடவடிக்கையை பார்க்கவும் முடியாது எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். டிரம்ப்பின் அறிவிப்புக்கு துருக்கி, செளதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன<

கருத்துகள் இல்லை: