திங்கள், 4 டிசம்பர், 2017

தொல். திருமாவளவன் : அரசியல் ஆதாயம் தேடும் ராமதாஸ்

அரசியல் ஆதாயம் தேடும் ராமதாஸ்
மின்னம்பலம்:  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது இல்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதைத் தனது கடமையாக வைத்திருக்கிறார் ராமதாஸ் என சாடியுள்ளார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
கோயம்புத்தூர் சென்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், அங்கு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஆனந்தன் என்பவர் தீக்குளித்த விவகாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் மீது இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுகிறார் டாக்டர் ராமதாஸ். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதைத் தன் கடமையாகச் செய்து வருகிறார். இதுதொடர்பாக, அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

அதோடு, ஒக்கி புயல் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையுடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார் தொல். திருமாவளவன். தொடர்ந்து பேசியவர், “பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில், ஆர்.கே.நகரில் மாலை 5 மணிக்கு மேல் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை பகலிலும் கொண்டுவர வேண்டும்.
ஏனென்றால் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பது, பணப்பட்டுவாடா நடக்க வழிவகுக்கும். எனவே, அதை அனுமதிக்கக்கூடாது. ஆர்.கே.நகரில் வரும் 7ம் தேதி நடக்கும் திமுக பிரசாரக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை: