ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பிரான்ஸ் . அல்லாகு அக்பர் என்று கத்திகொண்டே இருவரை குத்தி கொன்ற மர்ம .. மார்செயில்ஸ் ரெயில் நிலையத்தில் ..

Police in the southern coastal city said they had “neutralized” the assailant and cordoned off the area. A witness told Reuters she heard the assailant shouting "Allahu Akbar" ("God is great," in Arabic) during the attack. Police called the incident a "likely terrorist act." French Interior Minister Gerard Collomb said he was immediately heading to the scene of the attack.
மாலைமலர் :பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி இருவரை கொன்ற மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ்: ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர் பலி பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகரில் உள்ள செயின்ட் சார்லஸ் சுரங்க ரெயில் நிலயத்தில் இன்று ஒரு மர்மநபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் யார்?, காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சம்பவ இடத்துக்கு பிரான்ஸ் நாட்டு உள்துறை மந்திரி கெரார்ட் கோல்லம்ப் விரைந்துள்ளதாகவும் அந்த ரெயில் நிலையத்துக்கு அருகாமையில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: