ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு .. இருவர் மரணம் ... உரிய பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்க படவில்லை ! தமிழக அரசுமீது கடும் குற்றச்சாட்டு !

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்த 32 வயது வாலிபர் ராஜா உயிரிழந்தார். முன்னதாக, ராப்பூசல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கீரனூர் லட்சுமணப்பட்டியைச்சே ர்ந்த 30 வயது வாலிபர் மோகன் காளை முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மதுரை தமுக்கம் மைதானத்தில், ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 48 வயதுடைய சந்திரமோகன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
போட்டி துவங்குவதற்கு முன் காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில், போதிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
•காளைகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் தந்து, அவை சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் வசதி ஏற்படுத்தவேண்டும்.
•காளையின் மன நல பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் உரிமையாளர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.
•போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையையும், கால்நடை துறையின் டாக்டர்கள் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
•காயம் இருக்கும் காளையை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்.
•மழை மற்றும் சூரிய ஒளியில் இருந்து காளைகளை பாதுகாக்க வேண்டும்.
•போதை பாதிப்புக்கு உள்ளான காளையை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
•தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.
•காளைகளை பரிசோதனை செய்யும் இடம், பந்தல் வசதியுடன் இருக்க வேண்டும்.

•போட்டி நடக்கும் மைதானம் குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர் இட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.
•50 சதுர மீட்டர் பகுதிக்குள் தான், காளைகளை போட்டியில் பங்கேற்பவர்கள் ஏறுதழுவ வேண்டும்.
•வாடிவாசலை மறித்து கொண்டு போட்டியாளர்கள் நிற்க கூடாது. அதே போல் காளைகள் வெளியேறும் பகுதியையும் அவர்கள் மறிக்க கூடாது.
•காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15.மீட்டர் அல்லது 30 வினாடிகள் அளவுக்கு அல்லது காளையின் மூன்று துள்ளல்கள் வரை போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும்.
•போட்டியாளர்கள் காளையின் வால், கொம்பு மற்றும்வாலை பிடித்து அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த கூடாது.
•இந்த விதிகளை மீறும் போட்டியாளர்கள், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுவார்கள்.
•பார்வையாளர் மாடம், குறைந்தபட்சம், 8 அடி உயரத்தில், இரட்டை தடுப்பு வசதியுடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.
•பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும். பார்வையாளர் மாடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்பதை பொதுப்பணித்துறையினரின் வழிமுறைகளின்படி கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.
•போட்டியாளர்கள்மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள், கால்நடை டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.
•அவசர கால வெளியேறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது  முகநூல் பதிவு  சுமி B

கருத்துகள் இல்லை: