புதன், 7 டிசம்பர், 2016

சோ ராமசாமி காலமானார் .. (Srinivasa Iyer) Cho Ramaswamy dead !

சோவின் மரணம் #RSS சித்தாந்த கொள்கை பரப்புகளுக்கு இனி மேல பெரும் பின்னடைவு என்றே சொல்ல வேண்டும் .. திராவிடத்தை வேரோடு வேரடி மண்ணோடு ஒழிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்த திரு சோ ராமசாமி இறுதி வரை திராவிடத்தை உறுதியாக வெறித்தனமாக எதிர்த்தார்என்பதும் குறிப்பிட தக்கது .
Srinivasa Iyer, popularly known as Cho Ramaswamy, breathed his last at 4:15am at Apollo Hospitals, where he was admitted. He is survived by his wife, a son and daughter. Stay updated on the go with Times of India News App. Click here to download it for your device. From around the web;சென்னை: பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ என்கிற சோராமசாமி (84) காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்துள்ளது.  சோ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மிடாஸ் சாராய தொழிற்சாலையின் சேர்மன் ஆகவும் இவர் கடமை ஆற்றினார் . இவர் தனது திராவிட எதிர்ப்பை எப்பொழுதும் தனது பேச்சிலும் மூச்சிலும் காட்டியவராகும்.
ஒருவர் இறந்தால் அவரை விமர்சிப்பது பண்பல்ல என்ற கருத்தும் உள்ளது . இருந்தாலும் வரலாற்று உண்மைகளை பதிவு செய்வவேண்டியது அவசியமாகும். மேலும் இவர் தமிழ் மொழிமூலம் பத்திரிக்கை நாடகம் திரைப்படம் என்றெல்லாம் தனது வாழ்வை ஓட்டினாலும் . இவர் ஒரு சமஸ்கிருத இந்தி பிரசாரகராகவே இருந்தார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது பிரசாரத்தை மூர்க்கமாகவே தொடர்ந்தார் . பிராமணர்கள் உயர்ந்த ஜாதி என்ற மனு சாஸ்திர கருத்துக்களை தனது துக்ளக் பத்திரிக்கையில் அடிக்கடி எழுதுவார்
 ஜெயலலிதா உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், சோ ராமசாமியும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சோ மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உயிரிழந்ததை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விஜயசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பத்திரிகை, நாடகம், நடிகர், வழக்கறிஞர் என பன்முகத் துறையில் திறமை பெற்றவராக சோ விளங்கினார். துக்ளக் என்ற பிரபல அரசியல் வார இதழை கடந்த 1970ம் ஆண்டிலிருந்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: