வியாழன், 8 டிசம்பர், 2016

அன்றைய இரவு போயஸ் கார்டனில் அறுசுவை விருந்து .. சமையல்காரம்மா மட்டும் துக்கத்தில் சாப்பிடாமல் இருந்தார்

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்ததாக கூறப்படும் டிசம்பர் 5 ஆம் தேதி இரவு போயஸ் கார்டனில் அறுசுவை விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அறிவிப்பதற்கு முன்னரே அதாவது மாலை நேரத்தில் போயஸிற்கு கார்கள் அணிவகுத்துள்ளன. ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்தை அந்த கார்கள் நெருங்கியபோது, காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.
உள்ளே எட்டிப் பார்த்தபோது, ஜெயலலிதா வரக்கூடாது என சொன்னவர்கள் வண்டியில் இருந்துள்ளனர். அவர்கள் சசிக்கலா, இளவரசியின் உறவினர்களாம். இதனால் அதிர்ந்த மூத்த அதிகாரி, சசிக்கலாவை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்களை உள்ளே விடுங்கள் என உத்தரவிட்டாராம் சசிக்கலா. உள்ளே சென்ற உறவினர்கள் ஒரு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்ப்பது போல் போயஸ் இல்லத்தை சுற்றிப் பார்த்தார்களாம்.
“இதுதான் பெரிய அம்மா அறையா”, “இது தான் சின்ன அம்மா அறையா” என பேசிக் கொண்டார்களாம்.  பின்னர் சமையல் கார பெண்ணிடம் வேண்டியதை சமைக்கச் சொல்லி சாப்பிட்டார்களாம்.
 ஜெயலலிதாவின் விசுவாச  சமையல்கார பெண் அன்று இரவு சாப்பிடாமல் இருந்துள்ளார். liveday.in

கருத்துகள் இல்லை: