ஏழைகள் நடுத்தர மக்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் , சிறு வியாபாரிகள் எல்லாம் இன்னிக்கு நடுத்தெருவில் நிற்கிறார்கள் . மோடி செய்தது மாபெரும் தவறு .
நான் உண்மையை பேசினால் சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுகிறேன் என்கிறார்கள்.
உற்பத்தி செய்வதே மிகவும் சிரமம் .உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் ஏழை மக்கள் படும் துயரம் உங்களுக்கெல்லாம் தெரியல்லையா? அவனவன் செத்து கொண்டிருக்கிரான்.
நாடா புயல் கூட மக்கள் ரொம்ப நொந்து போயி இருக்கிறாங்கன்னுட்ட்டு ஒதிங்கி போயிட்டு . அதுக்குள்ளே கருணை கூட மோடிக்கி இல்லை.
கருப்புப்பணம் என்கிறீங்க .ஆயிரம் ஆயிரம் கோடி வைத்திருக்கிறவன் எவனாவது மாட்டிக்கிட்டானா? உங்களுக்கு ஒட்டு போட்டவனுக்கு முதுகில குத்தி சாகடிச்சுட்டீங்க.
தியேட்டர்கள் எல்லாம் காலியாச்சு இனி எவனும் படம் எடுக்க வரமாட்டான் . இதுகுதானா உங்களை மக்கள் தெரிவு செய்ஞ்சாங்க?
ஆமானப்பட்ட மம்தா பானர்ஜியையே வானத்தில ஒருமணிநேரம் சுத்த வைச்சு கொல்லப்பாத்தாங்க.
நீ ஏன் வெளிநாட்டுக்கு போய் சீனாக்காரன் வா அமேரிக்கா வான்னு ஒவ்வொருத்தனா கூப்பிட்டிகிட்டு இருக்கே? இங்க உள்ள தொழில் எல்லாம் அவனவனுக்கு தாரை வாத்து கொண்டே போவதேன்? இங்கயே தொழிலை தொடங்கினால் எல்லாரும் இங்கேயே வேலை கொடுக்கலாம்ல? பொண்டாட்டி சேர்த்து வச்சிருக்கிற பணத்தை கூட கருப்பு பணம்னு புடின்கினா மக்கள் எங்க போவாங்க?
மோடின்னா கருப்பா சிவப்பான்னு எனக்கு தெரியாது அவருமேல எனக்கு தனிப்பட்ட விரோதம் ஒன்ன்றும் கிடையாது . ஆனா நீங்க நல்லா யோசித்து பாருங்க இந்த ஆள் பதவி ஏற்ற நாளில் இருந்து அழிவு அழிவு அழிவுதான் வேற என்னத்தை பண்ணியிருக்கார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக