உடல்நலக் குறைவால் சென்னை
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 05.12.2016 திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். அவரது உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டு, பின்னர் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹால் கொண்டு வரப்பட்டது. அங்கு அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் இன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக