ஞாயிறு, 22 மார்ச், 2015

கல்லூரி தேர்வில் பிட் அடிப்பது பீகார் உபி குஜராத் மத்திய பிரதேஷ் போன்ற வடமாநிலங்களில் சகஜம்?

பீகாரைத் தொடர்ந்து, உ.பி.,யிலும், 'பிட்' கலாசாரம் களைகட்டியுள்ளது. கல்லூரி தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்த பேராசிரியரை, மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சியினர், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருந்த, திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில், சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. அப்போது, வைஷாலி, சஹார்சா, நவாடா ஆகிய மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர், நண்பர்கள், காப்பி அடிப்பதற்காக, 'பிட்' கொடுத்தனர். போலீசார் மெத்தனம்: வைஷாலி மாவட்டத்தில் மிக உயரமான கட்டடத்தில் மாணவர்கள் தேர்வு எழுதியபோது, அதன் ஜன்னல்களில் துணிச்சலாக ஏறி, பலரும், 'பிட்' சப்ளை செய்தனர். இந்த முறைகேட்டை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்டு கொள்ளவில்லை. 
வடமாநிலங்களில் பிஹார், உ.பி (முன்பு ஒரிசாவும் கூட) எல்லாவற்றிலும் மிகவும் மோசம்..பொது மக்களின் நடவடிக்கைகள் மிகவும் மோசம்...ரயிலில் டிக்கெட் எடுப்பதில்லை.ஓடும்போது ஜெயினை இழுத்து நிறுத்தி இறங்கி ஹாயாக போவது...மின்சாரத்தை இஷ்டத்துக்கு கொக்கி போட்டு  இழுத்து உபயோகபடுத்துவது. ரவுடித்தனம். சுத்தம் சுகாதாரத்தில் படு கேவலம்..டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி பேருந்து நிலையத்திற்கு சென்றவர்கள் சொல்வார்கள் சென்னை எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்று...மத்திய பிரதேசத்தை கூட இந்த பிஹார், உ.பி லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம்.. உண்மையில் தென் மாநிலங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன... ஆனால் வட இந்தியர்கள் தென் மாநிலங்களை சேர்ந்தவர்களை இளக்காரமாக தான் பார்ப்பார்கள்...அதற்கு ஒரே காரணம் அவர்கள் கொஞ்சம் சிவப்பாக இருப்பது ஒன்று மட்டும் தான்.....


இது தொடர்பான வீடியோ வெளியாகி, தேசிய அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும், சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த முறைகேட்டை கிண்டலடித்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த அம்மாநில கல்வி அமைச்சர், 'பீகார் மாநிலத்தில் இது போன்ற முறைகேடுகள் சகஜம்; இதை தடுக்க முடியாது' என தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு, பாட்னா ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. நடந்த சம்பவத்துக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் கண்டிப்பு:< இந்நிலையில், உ.பி., மாநிலத்திலும் இது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உ.பி.,யில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜான்சி மாவட்டத்தில் உள்ள பிபின் பிகாரி கல்லூரியில் தேர்வு நடந்தது. சில மாணவர்கள், காப்பி அடித்தனர். இதைப் பார்த்த பேராசிரியர் ஒருவர், அந்த மாணவர்களை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே, அந்த பேராசிரியரை சரமாரியாக அடித்து, உதைத்தனர். பேராசிரியர் மீதான தாக்குதலை தடுக்காமல் மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம், கல்லூரியில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ, வட மாநில, 'டிவி' சேனல்களில் வெளியானது. உ.பி.,யில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தாக்குதல் சம்பவம் நடந்த கல்லூரியின் மாணவர் பேரவை தலைவராக, ஆளும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராகுல் யாதவ் பதவி வகிக்கிறார். இவரின் தலைமையில் தான், சக மாணவர்கள், அந்த பேராசிரியர் மீது கொடூர தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். கல்லூரியின் முதல்வர் பாண்டே மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராகுல் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 'பிட்' சம்பவத்தை தொடர்ந்து, சமீபத்தில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியதாக, நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். குஜராத்திலும் அதிர்ச்சி: குஜராத் மாநிலத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, அறிவியல் பாட வினாத்தாள்கள் தேர்வு நடப்பதற்கு முன், 'வாட்ஸ் அப்' மூலம் வெளியானதாக தகவல் பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது உ.பி.,யிலும், 'பிட்' கலாசாரம் பரவி, பேராசிரியர் ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 'பிட்' கலாசாரம், நாடு முழுவதும் பரவுவது, கல்வியாளர்கள், பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 'இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. துப்பாக்கி சூடு; 300 பேர் கைது: பீகாரில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் நேற்றும் முறைகேடு நடந்தது. வைஷாலியில் ஹாஜிபுர் பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு நடந்தபோது, ஏராளமானோர், 'பிட்' கொடுப்பதற்காக பள்ளி வளாகத்தில் குவிந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடிக்க முயற்சித்தனர். இதற்கு பலன் இல்லாத தால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும், போலீசார் அவர்களை கலைத்தனர். போஜ்புரி மாவட்டத்திலும், 'பிட்' கொடுக்க முயன்றவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர். இந்த இரண்டு மாவட்டங்களிலும், 'பிட்' கொடுக்க வந்த, 300 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே எழுந்த புகாரின் அடிப்படையில், தேர்வில், 'பிட்' எழுதிய, 760 மாணவர்கள், மீதமுள்ள தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டது. 'பிட்' அடிக்க உதவிய, எட்டு போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, பீகார் மாநில அரசிடம், மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: