புதன், 25 மார்ச், 2015

தற்கொலை செய்துகொண்ட அதிகாரியை மிரட்டியவர்கள் யார் யார்? குடும்பத்தினர் பேட்டி!

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி, தற்கொலை செய்து கொள்ளும் முன், உள்ளூர் அ.தி.மு.க.,வினர், இரண்டு உயரதிகாரிகள் மிரட்டிய சம்பவம் அம்பலமாகி உள்ளது. முத்துக்குமாரசாமியின் மைத்துனர் வெளியிட்டுள்ள இந்த தகவலால், இந்த வழக்கின் விசாரணையில் திருப்பம் ஏற்படும் என, தெரிகிறது. வேளாண் பொறியியல் துறையில், நெல்லையில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர், முத்துக்குமாரசாமி. தன் துறையில், காலியாக இருந்த ஏழு ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பிய விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு விட்டது, தமிழக அரசு. முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு பின்னணியில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், அவர் முதலீடு செய்திருந்த பணத்துக்கு, வருமானவரித் துறையினர், கணக்கு கேட்டு விசாரணைக்கு அழைத்தனர்.  இன்னா தெரியரதுன்னா  அதிகாரிகள் தங்கள் ஜால்ராவை ...பக்க வாத்தியத்துடன் ஆளும் கட்சிக்கு ...அபசுரம் இல்லாமல் வாசிக்க வேண்டும்
அந்த மன உளைச்சலில் தான், அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது போல, செய்தி வெளியானது. கடும் அதிருப்தி அடைந்திருக்கும் முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர், நடந்தவை குறித்து, முதன்முறையாக, 'தினமலர்' நாளிதழுக்காக மனம் திறந்தனர்.

முத்துக்குமாரசாமியின் மைத்துனர், மகாதேவன் கூறியதாவது:

வீட்டுக்கடன்:

கடந்த 2012ம் ஆண்டு வரை, நெல்லை, என்.ஜி.ஓ., காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தான், முத்துக்குமாரசாமி குடியிருந்தார். நெல்லை திருமால் நகர், என்.ஜி.ஓ., ஏ காலனியில், தனக்கிருந்த ஒரு கிரவுண்டு நிலத்தில் புதிய வீடு கட்ட, எல்.ஐ.சி.,யில், 13.5 லட்சம் ரூபாய்க்கு கடன் பெற்றார்; வீட்டை கட்டித் தரும் பொறுப்பை, பக்கத்திலேயே உள்ள என்.ஜி.ஓ., காலனியில், அலுவலகம் நடத்தி வரும் பாலாஜி புரமோட்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை அணுகினார்.அவர்கள், 1,350 சதுரடியில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக, 13.5 லட்சத்தை பெற்று வீடு கட்டிக் கொடுத்தனர். இதற்காக, எல்.ஐ.சி., யில் இருந்து வாங்கியக் கடனை, புரோமோட்டர்சிடம் கொடுத்தார், முத்துக்குமாரசாமி. இரு ஆண்டுகளில் வீடு கட்டி முடிக்கப்பட்டு, 2012 ஜூன் 3ம் தேதி, கிரஹப்பிரவேசம் செய்து, புது வீட்டுக்கு குடி வந்தார், முத்துக்குமாரசாமி. இறப்பது வரை, மாதம்,
13 ஆயிரம் ரூபாய் என, எல்.ஐ.சி., கடனுக்கான தவணைத் தொகையை, முத்துக்குமாரசாமி செலுத்தி வந்தார். முத்துக்குமாரசாமியை போல, மொத்தம், 47 நபர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியில், 2011 - 12ல் ஈடுபட்டிருந்த பாலாஜி புரமோட்டர்ஸ், நிறுவனம், கிட்டத்தட்ட அந்த பணிக்காக,2.5 கோடி வரை பணபரிமாற்றம் செய்தது; அதை வருமானவரித் துறைக்கும் தெரிவித்திருந்தது. இதை சரிபார்க்கும் எண்ணத்தில், சம்பந்தப்பட்ட, 47 நபர்களுக்கும், கடந்த பிப்., 16ம் தேதி, 'நோட்டீஸ்' அனுப்பி, 20ம் தேதி, சம்பந்தப்பட்ட ஆவணங்களோடு விசாரணைக்கு வருமாறு, வருமான வரித்துறை அழைத்திருந்தது. விசாரணைக்கு அழைத்தது சாட்சியாகத்தானே தவிர, குற்றம்சாட்டப்பட்டு அல்ல. ஆனால், வழக்கு விசாரணைக்காக வீட்டுக்கு வந்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், வருமானவரித் துறையினர் அனுப்பிய நோட்டீசை வாங்கிச் சென்றனர்.இப்போது, நாங்கள் கொடுத்த அந்த விவரங்களை வைத்து, முத்துக்குமாரசாமி, ஏதோ தப்பான நபர் போல சித்தரிக்க முயல்கின்றனர்.



யார் அந்த 5 பேர்?

கடந்த இரு மாதங்களில், முத்துக்குமாரசாமி, 600 'போன்கால்'கள் செய்திருப்பதாக, தகவல்களை வெளியில் பரப்பி இருக்கின்றனர். ஆனால் அவருக்கு, யார் யாரிடம் இருந்தெல்லாம் போன் வந்தது என்ற தகவல்களை கண்டறிந்தும், அவர்கள் வெளியில் சொல்ல மறுக்கின்றனர்.குறிப்பாக, உள்ளூர், அ.தி.மு.க.,வினர் ஐவர், தொடர்ச்சியாக, முத்துக்குமாரசாமியை துரத்தி துரத்தி மிரட்டி இருக்கின்றனர். அது பற்றிய எந்த விசாரணையையும், இதுவரையில் செய்யாத, சி.பி.சி.ஐ.டி., போலீசார், பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். வேளாண் துறையில் தலைமை பொறியாளராக இருந்தவர், ஏழு ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பியது குறித்து, முத்துக்குமாரசாமிக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்ததை, என்னிடமே சொன்னார். 'துறையில் இருக்கும் உயரதிகாரிக்கு, தகவலைக் கொண்டு போங்கள்' என்று சொன்னேன்; 'அவர்
தான் உயரதிகாரி; அவர் மீதே புகார்... அதை யாரிடம் சொல்வது' என, கேட்டவர், நடந்தவைகள் அனைத்தையும், மாவட்ட கலெக்டரிடம் தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டார். உண்மையை அறிய வேண்டும் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரும்பியிருந்தால், மாவட்ட கலெக்டரிடம் விசாரித்து இருக்க வேண்டும்; ஆனால், இன்று வரை அதை செய்யவில்லை; தலைமை பொறியாளர் செந்திலை, இதுநாள் வரை விசாரிக்கவில்லை.கடந்த 5ம் தேதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அன்றைய தினத்தில், தற்போது உதவி செயற்பொறியாளர் பொறுப்பு வகிக்கும், சேரன் மகாதேவியை சேர்ந்த அதிகாரி வெள்ளையன், சில அதிகாரிகளை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 'நடந்தது நடந்து போச்சு... என் தந்தை குடும்பப் பிரச்னையில் தான் தற்கொலை செய்து கொண்டார்; எனவே, எம்.இ., படித்துள்ள எனக்கு, எல்காட் துறையில் பணி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என, எழுதித் தருமாறு, முத்துக்குமாரசாமி மகனை வலியுறுத்திக் கேட்டுள்ளார். இப்படி எங்கள் குடும்பத்தினரிடம் கேட்ட, வெள்ளையன் குறித்து, நாங்கள் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சொல்லியும், அவர்கள், இன்று வரை வெள்ளையனையும் விசாரிக்கவில்லையே, ஏன்?இவ்வாறு, அவர் கூறினார்.


'நோட்டீஸ்':

முத்துக்குமாரசாமிக்கு, வீடு கட்டிக் கொடுத்த பாலாஜி புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர், வழக்கமான விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாங்கள் வீடு கட்டிக் கொடுத்த, 47 நபர்கள் குறித்த பட்டியலை சமர்ப்பித்திருந்தோம். அந்த, 47 பேரையும் சாட்சியாக கொண்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வீடு கட்டியவர்களுக்கு, பணம் எங்கிருந்து வந்தது என்பது போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவ்வளவு தான். இதில், முத்துக்குமாரசாமியின் வீடு, 23 லட்சத்தில் கட்டப்பட்டது; அதற்கான முன் தொகை, 13.5 லட்சத்தை, அவர், எல்.ஐ.சி., மூலம் கடனாகப் பெற்று காசோலையாக வழங்கியிருந்தார். அவர் பெயரில் வீடு கட்டியதால், அரசு ஊழியர் என்ற முறையில் அதற்கான அனுமதியையும், அரசிடம் இருந்து பெற்றிருந்தார்; 47 பேரில், 25க்கும் மேற்பட்டோர் அரசு ஊழியர்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: