செவ்வாய், 24 மார்ச், 2015

டிஜிடல் வீரபாண்டிய கட்டபொம்மன் வர்ணங்கள் மேம்படுத்தப்பட்டு வெளிவருகிறது



கிஸ்தி திரை வரி வட்டி... என பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வெள்ளைகார துரையிடம் சிவாஜி கணேசன் கர்ஜனை குரலில் பேசிய வசனம் இடம்பெற்ற படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்' . பி.ஆர்.பந்துலு இயக்கம். 1959ம் ஆண்டு திரைக்கு வந்தது. பத்மினி, ஜெமினி கணேசன், ஓ.ஏ.கே.தேவர் உள்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். இப்படம் டிஜிட்டல் முறையில் கலர் கரெக்ஷன் மற்றும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. சிவகுமார், ராம் குமார், பிரபு, தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து, விநியோகஸ்தர் சங்க நிர்வாகி அருள்பதி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரபு,‘இப்படத்தில் என் தந்தை சிவாஜி வீரமுழக்கத்துடன் பேசிய வசனங்கள் ரசிகர்களால் மட்டுமல்ல ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்களாலும் ஈர்க்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் மட்டுமல்லாமல் இன்றைய இளைஞர்களும் கண்டிப்பாக இதை வரவேற்பார்கள்'  என்றார்
.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: