புதன், 25 மார்ச், 2015

ஷ்ரேயா சிங்கால்! இணையதள சுதந்திரத்துக்காக போராடி வெற்றிவாகை சூடிய மாணவி


இணையதள கருத்து
சுதந்திரத் துக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஷ்ரேயா சிங் கால் சாதகமான தீர்ப்பைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 2012-ம் ஆண்டில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவின்போது மும்பை முடங்கியது. இதுகுறித்து பேஸ் புக்கில் கருத்து தெரிவித்த பெண்ணும், அதை ஆமோதித்த அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் எனது மனதை பாதித்தது.
அப்போது நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண் டிருந்தேன். இணையதள கருத்துத் சுதந்திரத்தை மீட்க உறுதிபூண்டேன். 66 ஏ பிரிவு மத்திய, மாநில அரசுகளால் தவறாக பயன்படுத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
எனவே மக்களுக்காக நானே களம் இறங்க முடிவு செய்தேன். நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இப்போது மிகப்பெரிய வெற்றி கிடைத் துள்ளது.
மக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஷ்ரேயாவின் தாயார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். அவரது பாட்டி நீதிபதியாக பணி யாற்றியவர் ஆவார்.  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: