முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்,
சொத்துப்பட்டியலை ஆடிட்டர் குழு ஆய்வு செய்துவருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இந்த குழுவின் அறிக்கை கிடைத்த உடன் தீர்ப்பின் தேதியை நீதிபதி குமராசாமி
அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்புக்கான
முகவுரையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு
மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 41 நாட்கள் நடைபெற்று கடந்த
17ஆம் தேதி முடிவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு நீதிபதி
குமாரசாமி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் வழக்கின் ஆவணங்களை சரியாக மதிப்பிட ஆடிட்டர்கள் குழுவின்
உதவியை நீதிபதி நாடியுள்ளார். இதனையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின்
சொத்துகளை ஆடிட்டர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த குழுவின் அறிக்கைக்காக நீதிபதி காத்திருப்பதாகவும், இந்த வழக்கின்
தீர்ப்புக்கான முகவுரையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக
ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று
வந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு
விசாரணை கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி, மார்ச் 11ஆம் தேதியோடு நிறைவு
பெற்றிருக்கிறது.
தீர்ப்பு தேதியை அறிவிக்காமல் நீதிமன்றத்தை ஒத்திவைத்திருக்கிறார் நீதிபதி.
தேதி தெரிந்தாலாவது கொஞ்சம் தெம்போடு இருக்கலாம். ஆனால் தேதியே தெரியாமல்
பக்... பக்... பதற்ற மனநிலையோடு இருக்கிறது போயஸ்கார்டன்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில்,
அன்புக்கரசு, பன்னீர்செல்வம், செல்வகுமார், குலசேகரன், நாகராஜன், திவாகர்,
பரணிகுமார், கருப்பையா, தனஞ்செயன், முத்துகுமார், அம்பிகை தாஸ், மகேஸ்வரன்
கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் வாதாடினர்.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல்
ஐ.ஜியான குணசீலன், டி.எஸ்.பியான சம்பந்தம் சார்பாக அரசு வழக்கறிஞர் பவானி
சிங்கும், அவரின் தற்காலிக உதவியாளர் சதீஷ் கிரிஜியும் ஆஜரானார்கள்.
இந்த வழக்குக்காகச் சிறப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த பிச்சைமுத்து,
யோகானந்த் ஆகியோர் நீதிபதி கேட்கும் ஆவணங்களை உடனுக்குடன் எடுத்துத்
தருவதற்காக இந்த நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
ஜெயலலிதா தரப்பு வாதங்களும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்
துறையின் வாதமும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் 3ஆம் தரப்புவாதியான
சுப்பிரமணியன் சாமியின் எழுத்துப்பூர்வ வாதத்தை கடந்த 11ஆம் தேதி தன்
வழக்கறிஞரோடு வந்திருந்த சுப்பிரமணியன் சுவாமி 14 பக்க எழுத்துப்பூர்வ
வாதத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அப்போது சுப்ரமணியசாமியிடம் பல்வேறு
கேள்விகளை எழுப்பினர்.
சாமி தனது வாதத்தில், ''ஜெயலலிதா, முதல்வர் பதவியை துஷ்பிரயோகம்
செய்து, சொத்து சேர்த்ததால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா,
1979-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 1985-86-ம்
ஆண்டு வருமானவரித் துறையில் தாக்கல்செய்த அறிக்கையில் தனக்கு எந்த
வருமானமும் இல்லை என்று கூறி இருக்கிறார்.
1984-89 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில்
1988-ம் ஆண்டு ரூ.9.2 லட்சம் செலவில் 4 கார்களும், ரூ.1.40 லட்சத்தில் ஒரு
ஜீப்பும் வாங்கியுள்ளார். எந்த வருமானமும் இல்லை என்று 1985-ஆம்
தெரிவித்தவருக்கு, எம்.பியாக இருந்த காலத்தில் மட்டும் எப்படி வருமானம்
வந்தது?
1990-ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன்,
சசி எண்டர்பிரைசஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகிய 3 நிறுவனங்களைத்
தொடங்கினார்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில்
எந்தப் பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. ஜெயலலிதா முதல்வரானதும் இந்த
நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை
நடைபெற்றுள்ளது
29 நிறுவனங்கள்
கூடுதலாக 29 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் சுதாகரன், இளவரசி
பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். அந்த 29 நிறுவனங்களில் எந்தச்
செயல்பாடும் இல்லாத நிலையில் வங்கிக் கணக்கில் மட்டும் கோடிக்கணக்கான
அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன
1991ஆம் ஆண்டில் முதல்வராவதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத்
தோட்ட பங்களாவைப் புதுப்பிக்க தனி நபரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கிய
ஜெயலலிதாவுக்கு 1991-96 வரை அவர் முதல்வராக இருக்கும்போது கோடிக்கணக்கான
பணம் எப்படி வந்தது? 1987-93ஆம் ஆண்டு வரை இவர் வரி கட்டவில்லை. இவர்கள்
கூட்டுச்சதி செய்து வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை சேர்த்துள்ளதை கீழ்
நீதிமன்றம் விசாரணை நடத்தி, உறுதி செய்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணியன் சாமியின் எழுத்துப்பூர்வ வாதத்துக்குப்
பதில் வாதத்தை 6 பக்கங்கள் தயாரித்துக் கொடுத்தார். சுப்பிரமணியன் சாமியின்
எழுத்துப்பூர்வ வாதம் ஆதாரமற்ற வாதம் என்பதால் இந்த நீதிமன்றம் அதை
ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டார். பவானி சிங் தன் தரப்பு
வாதங்களை 4 பக்கங்களில் கொடுத்தார். அதையடுத்து நீதிபதி குமாரசாமி, ''இந்த
வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணையும் முடிந்துவிட்டதால் தீர்ப்புத்
தேதியை அறிவிக்காமல் ஒத்தி வைக்கிறேன்'' என்று கூறி அன்றைய விசாரணையை
ஒத்திவைத்தார் நீதிபதி குமாரசாமி.
தீர்ப்பை எழுதும் பணியில் நீதிபதிக்கு உதவியாக 5 பேர் கொண்ட குழு
செயல்பட்டு வருகின்றது. நடப்பு வார இறுதியில் மேல் முறையீடு தீர்ப்புக்கான
முகவுரை தயாரிக்கும் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனை
தொடர்ந்து ஆடிட்டர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் தீர்ப்பை நீதிபதி
எழுதவுள்ளார். மார்ச் இறுதியிலோ ஏப்ரல் முதல் வாரத்திலோ சொத்து குவிப்பு
வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் எ
நீதிமன்றத்தில் ஜான் மைக்கேல் டி.குன்ஹா 64 ஆயிரம் பக்கங்கள்கொண்ட
ஆவணங்களை வைத்து, 1,300 பக்கங்களுக்குத் தீர்ப்பை வழங்கினார். இந்தத்
தீர்ப்பை எதிர்த்துத்தான் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.குன்ஹா கொடுத்த
நான்கு ஆண்டு சிறைத் தீர்ப்பில் 21 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு போயஸ்
கார்டனுக்குள் போன ஜெயலலிதா, இன்னமும் வெளி உலகத்துக்கு வரவில்லை.
அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடரக் கூடாது என க.அன்பழகன் தாக்கல்
செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த மனுவில் என்ன உத்தரவு
வரப்போகிறது என்பதை வைத்துத்தான் தீர்ப்புத் தேதி முடிவு ஆகும். அதில்
எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றால், மார்ச் மத்தியில் தீர்ப்பை
வழங்கிவிடுவார் நீதிபதி என்றே பெங்களூரு தகவல்கள் சொல்கின்றன. குன்ஹாவின்
தீர்ப்பை நீதிபதி குமாரசாமி மாற்றுவாரா? அல்லது அந்த தீர்ப்பையே
உறுதிப்படுத்துவாரா? திக் திக் மனநிலையோடு காத்திருப்பது போயஸ்கார்டன்
மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும்தான். /tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக