சனி, 28 மார்ச், 2015

காஷ்மீர் : இந்திய அணியின் தோல்வியை கொண்டாடினார்கள்!

ஸ்ரீநகர், உலக கோப்பை அரையிறுதி  ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வியை காஷ்மீர் மக்கள் கொண்டாடியதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது உலக கோப்பை அரையிறுதி போட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத பல ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். அதேபோல், இந்தியாவிலும் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். சிலர் தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். 


ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அறிந்த காஷ்மீரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதை பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகளையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர். 

வணிக வளாகங்களிலும் தொலைக்காட்சி ஷோரூம்களிலும் நின்று ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்தியாவின் தோல்வியை கட்டித்தழுவி கொண்டாடினர். இந்தியாவின் தோல்வி பற்றி இம்ரான் பத் என்ற காஷ்மீர் வாசி கூறுகையில், ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்  என்றார். திரால், பாராமுல்லா, குப்வாரா, காந்தர்பல், சோபோர் மற்றும் அனந்தநாக் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மக்கள், இந்திய அணியின் தோல்வியை கொண்டாடினர்.

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா ஆதரவுடன் முப்தி முகம்மது தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடதக்கது.dailythanthi.com

கருத்துகள் இல்லை: