தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, அந்தகட்சியின் கொள்கை பரப்பு செயலராக விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட் செய்யப்பட்ட அமைப்பு செயலர் கல்யாணசுந்தரம் கனிமொழி மீதும் ராசா மீதும் அரங்கேற்றிய வசை நாடகத்தால் திமுகவை சீர்திருத்த வேண்டிய தேவை அவசர தேவையாகி விட்டது , ஸ்டாலினின் வழியை கிளியர் பண்ணவே கனிமொழி, தயாநிதி, ராஜா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்' என, கூறியிருந்தார். இதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர்களுக்கு பதவி கொடுத்து சரிகட்ட முயற்சித்து வருகிறது, தி.மு.க., மேலிடம்.அதன்படி, கனிமொழிக்கு கொள்கை பரப்பு செயலர் பதவியையும், ராஜாவுக்கு, துணை பொதுச் செயலர் பதவியையும் வழங்க, கலைஞர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரிடம், அவர் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில், கடந்த, 7ம் தேதி காட்டாங்கொளத்துாரில் தொண்டர்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள் பலரும் கனிமொழியை கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க, கனிமொழி ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த நேரத்தில் கனிமொழிக்கும், ராஜாவுக்கும் பதவி கொடுத்து, முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், ஸ்டாலின் தரப்பினர் அடங்கிவிடுவர் என, திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. dinamalar.com
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக