வியாழன், 14 ஆகஸ்ட், 2014

தமிழக்தில் மட்டுமே பெயருக்கு பின்னால் ஜாதி இல்லை ! தந்தை பெரியாரின் உலக சாதனை !

Mannargudi_News_11-08-2014_Ph_1[1]எளிய மக்களுக்கான எதிர்ப்பு அரசியலின் குறியீடு

மன்னார்குடி ஆக. 10
சிந்தனை முற்றம் இலக்கிய அமைப்பின் சார்பில் சமூக வாழ்வியலுக்கான கவியரங்கம், கருத்தரங்கம் மன்னார்குடி அம்பேத்கர் அறிவாலயத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் வே.மதிமாறன் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஆதலினால் காதல் செய்வீர் என்ற தலைப்பில் கவிஞர் பரிதி பாண்டியன்
தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கருக்கல் விடியும் ஆசிரியர் அம்ராபாண்டியன் தலைமையில் அண்ணலும் அய்யாவும் என்ற தலைப்பில் நடைபெற்ற
கருத்தரங்கத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் பேசியது:
இங்கர்சால், பெட்ரண்ட்ரஸ்சல் போன்றவர்களைப்போல் வெறும் நாத்திகரல்ல பெரியார். அவர்களை விட பலமடங்கு உயர்ந்தவர். அவர்கள் இருவரும் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள்.
மற்றபடி மக்களின் வாழ்க்கையில் ஆதிக்கத்திறகு எதிராக அவர்கள் போராடியவர்கள் அல்ல. ஆனால் பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழக்கையை மேம்படு­­த்தியவர்.
தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல, ஜாதி எதிர்ப்புப்போராளியும் கூட. அதனால் தான் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பாக தமிழகத்தில் மட்டும் தன் பெயருக்கு பின் ஜாதி பெயர் போட்டுக்கொள்வதை ஒழித்தவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வேலை வாய்ப்பு நல்வாழ்விற்கு காரணமானவர். அவர் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப்போராடாமல் இருந்திருந்தால் இன்று நாம் எழுதப்படிக்கக்கூட தெரியாத தற்குறிகளாக இருந்திருப்போம்.
தன் வாழ்நாள் முழுக்க ஓய்வெடுப்பதைக் கூட அவமானமாக, திமிர் பிடித்ததாக கருதி ஒய்வே இல்லமால், கடுமையான உடல் உபாதையுடனும் மூத்திரப் டியூபோடு தொடர்ந்து பொதுகூட்டங்களில் பேசிய உலகின் ஓரே தலைவர்.
டாக்டர் அம்பேத்கர் தன் படிப்பு, தன் அறிவு, தன் உழைப்பு அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்காகவே அர்பணித்தவர். அவர் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதியாக இரண்டு முறை வந்திருக்க முடியும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அனைத்து சமூக பெண்களுக்காகவும் இந்து சட்ட மசோதாவை கொண்டுவந்தார்.
அதை நேரு அரசு உடனடியாக அமல்படுத்த முன் வராத காரணத்தால் தான் தன் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். இன்று அந்த சட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறுபவர்கள். தாழ்த்தப்பட்ட பெண்கள் அல்ல. மற்ற சமூகத்தின் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மாபெரும் மேதை என்று உலகளவில் அறியப்பட்ட ஓரே தலைவர்.
ஜாதி, மத ஆதரவு, காந்தி ஆதரவு என்கிற நிலையில் ஒருவர் இந்தியாவின் பெரிய தலைவர் ஆவது அதிசயமல்ல. ஆனால், இவற்றை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக போராடிய ஒருவர் மாபெரும் தலைவர் ஆவது என்பது சாதாரணமல்ல.
எளிய மக்களுக்கான எதிர்ப்பரசியலின் குறியீடு டாக்டர் அம்பேத்கர் என்றுகூறினார்.
முன்னதாக பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர் என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பசுகௌதமன் வெளியிட்டார். ஆயுள் காப்பிட்டுக்கழக தொழிற்சங்க நிர்வாகி சேதுராமன் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் குறுந்தகடை பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக மன்னை காளிதாசு வரவேற்றார். சேரன்குளம் செந்தில்குமார், பேராசிரியர் எஸ்.டி.ஜெயராமன், தடா ரவி, மன்னை ஜே.ஆர்.எஸ்., வருவாய்த்துறை அலுவலர் மகேஷ்குமார், கவிஞர் கலைபாரதி, வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். செந்தமிழன் நன்றி கூறினார். (நன்றி தமிழ் இந்து நாளிதழ்)
IMG
Mannargudi_News_11-08-2014_Ph_2[1]
Mannargudi_News_11-08-2014_Ph_3[1]
Mannargudi_News_11-08-2014_Ph_5[1]

10583924_293955830805228_725890522743981581_n

கருத்துகள் இல்லை: