நடிகர்
ரஜினிகாந்த், சிமோகா மாவட்டத்தில் நடந்து வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பில்
கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மங்களூர் சர்வதேச
விமான நிலையத்துக்கு சென்றார்.ரஜினிகாந்த்
வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் மங்களூர் விமான நிலையத்தில்
திரண்ட னர். பின்னர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த
பேட்டியில், “சிமோகாவில் நடக்கும் லிங்கா படப்பிடிப்பில் கலந்து
கொள்வதற்காக மங்களூர் வந்துள்ளேன். நான் இங்கு (மங்களூர்) 22 ஆண்டுகள்
கழித்து வந்துள்ளேன். ஆனாலும் எனக்கு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள்
சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து
கொள்கிறேன்.லிங்கா படம் ஏற்கனவே கர்நாடக மாநிலம் மைசூரில் தொடங்கி மண்டியா, மலவள்ளி, மத்தூர் ஆகிய பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பாபா குசேலன் கொச்சடயான்னு ரொம்பவும் குடைச்சல் பாருங்க .என்ன பண்றது உடம்பு வேற சரியில்ல .எதோ மக்சிமும் பணம் பணம்னு குடும்பம் வேற குடைச்சல் . நம்ப ரசிக கூமுட்டைகளுக்கு அரசியல் ஆசை பிடிச்சி ஆட்டுது, அதை கொஞ்சம் வேப்பிலை அடிச்சாதான் லிங்கா ஓடும்னு புதுசா ஒரு மந்த்ரவாதி சொன்னான் அதாய்ன்
தற்போது
இந்த படத்தின் படப்பிடிப்பு சிமோகாவில் 21 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு
உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் லிங்கா படத்தை, எனது பிறந்த நாளான டிசம்பர்
12–ந் தேதி திரைக்கு கொண்டு வர வேலைகள் நடந்து வருகிறது’’என்றார்.
நீங்கள்
அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, , ‘அரசியலில்
நுழைவது தெய்வச் செயல். கடவுள் மனது வைத்தால் அது (அரசியலுக்கு வருவது)
நடக்கும். ஒரு மாநிலத்தின் முதல்–மந்திரியை மக்கள் தான் முடிவு செய்ய
வேண்டும்’ என்றார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக