சென்னை:''ஒருமுறை தவறு செய்தாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை
செய்யும், சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், ஜனநாயக
ரீதியாக எதிர்வினைகளில் ஈடுபடுவர்களையும், தவறு செய்ததாக இட்டுக்கட்டி,
இந்த ஆட்சியினர் கைது செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது,'' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சட்டசபை கூட்டத்தொடர் இறுதி நாளில், 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அந்த மசோதாக்களில் ஒன்று, கள்ளச் சாராயம் விற்பவர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், காணொலித் திருடர்கள் முதல் முறையாக, குற்றம் புரியும் போதே, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, வழிவகை செய்து இயற்றப்பட்ட மசோதாவாகும். விதைத்தவர்களே வினையை அறுக்கும் காலம் விரைவில் வரும். அப்போது அவர்களாகவே இச்சட்டத்துக்கு எதிராக போராடுவார்கள். ஒரு ட்ராபிக் மீறலுக்கே குண்டர் சட்டம் என்றால் 18 வருடங்களாக செய்த குற்றத்திலிருந்து எஸ்கேப்பாக முயல்பவர்களுக்கு எத்தனை குண்டாஸ் போட வேண்டும்.
இந்த ஆட்சியினர், ஏற்கனவே உள்ள குண்டர் சட்டத்தை பயன்படுத்தி, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட, தங்களுக்கு பிடிக்காதவர்களை கைது செய்து, சிறையில் அடைந்து வந்தனர்.தற்போது, மேலும் ஒரு வசதியாக, ஒருமுறை தவறை செய்தாலும், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, வழிவகை செய்து, சட்ட மசோதாக்களை இயற்றி இருக்கின்றனர்.
பாலியல் குற்றவாளிகள், முதல் முறை அக்குற்றத்தை புரிந்தாலும், உண்மையாக தவறு செய்பவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து தண்டிப்பது பற்றி, நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், தவறு செய்யாதவர்களையும், அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்பவர்களையும், ஜனநாயக ரீதியாக எதிர்வினைகளில் ஈடுபடுவர்களையும், தவறு செய்ததாக இட்டுக்கட்டி, இந்த ஆட்சியினர் கைது செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு, கருணாநிதி கூறிஉள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக