தி.மு.க.வின்
செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் தி.மு.க. பொருளாளர்
மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களை தொடர்ந்து,
மூன்றாவது மாவட்டமாக தூத்துக்குடியில், அம்மாவட்ட மாணவரணி, இளைஞரணி,
மகளிரணி நிர்வாகிகளிடம் அணி வாரியாக ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் கிளை கழக
நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை சந்தித்து
கருத்துக்களை கேட்டறிந்தார்.
மாலையில்
கட்சியின் பொதுஉறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி
வைத்து அதிமுக சதிவேலையில் ஈடுபட்டதே திமுகவின் தோல்விக்கு காரணம்.
தமிழகத்தில் தேர்தலுக்கு முதல் நாள் திடீரென்று 144 தடை உத்தரவு போட
வேண்டிய அவசியம் என்ன. புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக்
கட்சியோடு நாம் கூட்டணி அமைத்தோம். ஆனால் அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி
இல்லை என்று சொன்னார்கள். நான் சொல்கிறேன் நீங்கள் தேர்தல் கமிஷனோடு
கூட்டணி அமைத்தீர்கள். அதனால் தான் தேர்தல் கமிஷனர் பயந்துவிட்டார். விலக
போகிறேன். விலக போகிறேன் என்கிறார்.
மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக வரும் 20ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக திமுக வலைதளங்கள் செயல்பட துவங்கும் என்றார்.
மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக வரும் 20ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக திமுக வலைதளங்கள் செயல்பட துவங்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக