வியாழன், 14 ஆகஸ்ட், 2014

வாய்தா ராணியின் அடுத்த மூவ் ! சமுக வலைத்தளங்களை முடக்க சட்டம் ! fear of opinions?

அம்மம்மா ...உங்களின் அடிமையாக்கும் தனத்தை உங்க கட்சிகாரங்க, அமைச்சர்கள் கிட்ட மட்டும் வச்சுக்கோங்க...அவிங்க மேஜையை தட்டுவாங்க ! மக்கள் மீதோ கருத்து சொல்றவங்க மீதோ காட்டாதீங்க... ஆட தெரியாதவ தான் தெரு கோணலா இருக்குன்னு சொல்லுவா.. அத்து மீராதீங்க.....
தகவல் தொழில் நுட்பக் குற்றங்களைத் தடுப்பதற்காக, சிறப்பு சட்டம் ஒன்றை, நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு.அதாவது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, இந்த சட்டத்தின் மீது வழக்குப் பதிந்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் தள்ள, இந்த சட்டம் வகை செய்கிறது.சமூக வலைதளங்களில், சமூகம் குறித்த தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், இது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.குறிப்பாக, அரசுக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் இனி, தைரியமாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என, அவர்கள் புலம்புகின்றனர். அரசியல் வட்டாரங்களிலும் இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வலைப் பதிவர் ஜேம்ஸ் பிரபாகர் கூறியதாவது: உள்ளங்கையில், உலகை சுருக்கி இருப்பது சமூக வலைதளங்கள் தான்.சாதாரண குக்கிராமத்தில், அடி பம்பில் தண்ணீர் வராத பிரச்னையில் ஆரம்பித்து, நாசாவில் நடக்கும் ஆராய்ச்சி வரை, நொடிக்குள் உலகம் முழுவதற்கும் தகவல்களை கொண்டு சேர்க்கும் பிரதான காரணிகளாக இருப்பது, சமூக வலைதளங்கள். அவற்றில் சுதந்திரமாக இயங்க வகை செய்யாமல், சட்டம் போட்டு தடை செய்தால், அவைகளில் கருத்துகளை சொல்ல யாரும் முன் வரமாட்டார்கள். அரசியல்வாதிகளின் தவறுகள், இனி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது, குறைந்து விடும்.கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை, இந்தியா முழுவதற்கும் வெளிச்சம் போட்டு காட்டியதில், சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த சட்டத் திருத்தத்தால், அப்பாவிகள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.  எதிர்கட்சிகளை சட்டசபையில் இருந்து துரத்தி அடிச்சாங்க... அடுத்து பத்திரிகை களின் மீது தாக்குதல். ... இப்போ கருத்து சொல்றவங்க மேல நடவடிக்கை... ஆடாதடா ஆடாதடா மனிதா... ஆடிபுட்ட அடங்கிடுவ மனிதா....
சமூக வலைபதிவர் சிவ சிவா கூறியதாவது:தமிழகத்தில், வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை. அந்தப் பணியை, பத்திரிகைகளும், சமூக வலைதளங்களில் இயங்கும் வலைப் பதிவர்களும் தான் செய்து கொண்டிருக்கின்றனர்.அதை நசுக்குவதற்காகத் தான், இப்போது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, புதிய சட்ட மசோதவை கொண்டு வந்து இருக்கின்றனர்.தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள், தினந்தோறும் நடக்கின்றன. நேற்று கூட, சென்னை பூந்தமல்லியில் வீட்டில் இருந்த கணவன் மனைவியை, மர்ம நபர்கள் வெட்டி கொன்றனர். இந்தமாதிரி நிகழ்வுகளை வலைப்பதிவர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக, மக்களுக்கு, தங்கள் எண்ணங்களுடன் கொண்டு செல்கின்றனர். சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விவகாரம் குறித்து, அரசின் தவறுகளை, சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டினோம். அரசு தரப்பு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினோம்.இனி, அது மாதிரி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்திருக்கிறது, தமிழக அரசு.நாளையே என்னை கைது செய்ய வேண்டும் என்றால், தகவல் தொழில் நுட்பத்தை, நான் தவறாக பயன்படுத்தினேன் என்று சொல்லி, கைது செய்து, குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் அடைக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் கூறியதாவது:புதிய சட்ட மசோதா, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையான, தனிமனித உரிமையை பறிக்கும் செயல். பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை முடக்கிப் போடும் செயல்.டாஸ்மாக், மதுபானக் கடைகள் மூலமாக, தினந்தோறும் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தாலி அறுத்து நிற்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை எக்காரணம் கொண்டும் மூட முடியாது என, சட்டசபையில், கலால் துறை அமைச்சர் அறிவிக்கிறார்.இதை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இனி அவ்வாறு விமர்சிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.தொடர்ச்சியாக குற்றங்களை செய்து, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதுதான், குண்டர்கள் தடுப்பு சட்டத்தை பாய்ச்சும் நிலைமை இருந்தது. ஆனால், இப்போதைய சட்ட திருத்தத்தால், ஒரு முறை, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தினார் என, வழக்கு பதியப்பட்டாலே, அவரை குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்துவிட முடியும்.இது கொடுமையான அறிவிப்பு. அதனால் அரசு, இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது தொடர்பாக, ம.தி.மு.க., பொது செயலர் கூறியிருப்பதாவது:தகவல் தொழில் நுட்பத்துறையில் வியத்தகு வளர்ச்சி பெற்று கோடிக்கணக்கானோர், சமூக வலைத் தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.அரசின் மீது கருத்து மாறுபாடு கொண்டோர், அரசு நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்தோர், இனி கருத்துக்களை பகிர்ந்தால், தற்போது கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த மசோதாவின்படி நடவடிக்கை எடுத்து, அவர்களை சிறையில் தள்ள முடியும்.தகவல் தொழில் நுட்பக் குற்றங்களை தடுப்பதற்காகவே, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக, அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.ஆனால், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்குத் தான், வாய்ப்புகள் அதிகம். இச்சட்டத் திருத்தம், இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 22க்கு எதிரானது என்று, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு சொல்லியிருக்கிறார். மேலும், அரசியல் சாசனம் பிரிவு 21ன் கீழ், வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திர உரிமையையும் தட்டிப் பறிப்பதாக, சட்டத் திருத்தம் அமைந்துள்ளது.இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு, எந்தவித உறுதிமொழியும் இல்லை.இவ்வாறு அவர், கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: