புதுடெல்லி
இந்தியாவில் குழந்தை பாலின விகிதத்தில் பெண்கள் விகிதம் மிகவும் வீழ்ச்சி
அடைந்து இருப்பது குறித்து டெல்லி மேல் சபையில் இன்று கவலை
தெரிவிக்கபட்டது.
டெல்லி மேல் சபையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை சார்பில் விவாதம் தொடங்குவதற்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சதீஷ் சந்திர மிஸ்ரா பேசும் போது ஆய்வுகளின் படி இந்தியாவில் பாலின விகிதம் மிகவும் சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போதைய விகிதத்தின் படி 1000 ஆண் குழந்தைகளூக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் இந்த சபைக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். பஞ்சாபில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 832 பெண் குழந்தைகள் உள்ளனர். என குறிப்பிட்டார். இதற்கு துணை தலைவர் பி.ஜே. குரியன், இது ஒரு ஆபாத்தான நிலை என கூறினார்.
மிஸ்ராவின் கூற்றை ஒப்பு கொண்ட சபை உறுப்பினர்கள் இது மிகம் வெட்ககேடானது என கூறினர்.
தொடர்ந்து பேசிய மிஸ்ரா, பெற்றோர்கள் பெண்குழந்தை பிறப்பது குறித்து கவலையடையக் கூடாது. முதல் சுதந்திர போராட்டத்தில் முன்னணி வீராங்கனையாக திழந்த ராணி லட்சுமி பாயை நினைவு கூறுங்கள்.
அவர்கள் நமக்கு பெருமை சேர்ப்பார்கள். எனக்கு 4 பெண் குழந்தைகள் நான் பெருமையடைகிறேன். எனது மகன் மற்றும் மகளுக்கு பிறகு எனது மனைவி ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றார்.நான் உங்களிடம் ஒன்று கூறுகிறேன் அந்த நேரம் உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக உணர்ந்தேன்.அது போல் வரதட்சணை கொடுமையும் இந்தியாவில் மிக முக்கிய சமூக தீமையாக நடைபெற்று வருகிறது.என கவலை தெரிவித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் மோஷினா கித்வாய் கூறும் போது இந்த அரசு அடுத்த தலைமுறையினர் மீது அக்கறை செலுத்த வேண்டும். இது போன்ற ஒரு மரபு எதிர்காலத்தில் வர வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நம் நாட்டில் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை உணர வேண்டும். என கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக