வியாழன், 14 ஆகஸ்ட், 2014

இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி! கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் !

சென்னை:இந்து முன்னணி மாவட்ட தலைவர், சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்போர், இந்து தலைவர்களின் உயிருக்கு குறிவைத்து, தமிழகத்தில் பலர் பதுங்கி இருப்பதாக, வாக்குமூலம் அளித்து இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு, பா.ஜ., மாநில நிர்வாகிகள் அரவிந்த ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ் உள்ளிட்ட பலர், அடுத்தடுத்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்து முன்னணி தலைவர்கள் தங்கள் நாவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நாட்டுப்பற்று இல்லாத இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு விரட்டுவோம் என்று கொக்கரிக்க கூடாது. இந்தியாவில் பல கட்சிகள் இருக்கும்போது, இந்து முன்னணி தலைவர்கள் மட்டும் கொல்லபடுவது ஏன்? ஏனெனில், துடுக்குத்தனமாக நாவை கட்டுபடுத்தாமல் கண்டபடி பேசுவது தான். அதனால் தான் சிலருக்கு கோவம் ஏற்படுகிறது. அதனால் விபரீதம் ஏற்படுகிறது. இந்தியாவில் பிறந்த கிருத்துவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இந்தியாதான் சொர்க்கம். இதுதான் தாய்நாடு. இதை நிருபிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. அதை தட்டிகேட்க இந்து முன்னணி தலைவர்களுக்கும் எந்தவித உரிமையும் இல்லை. மேலும் இந்து முன்னணி தலைவர்களை கண்டு, முஸ்லிம்கள் கோபம் கொள்ள தேவை இல்லை. அவர்களின் பேச்சிற்கு இந்தியாவில் எந்த செல்வாக்கும் இல்லை. அப்படியே கோபம் கொண்டாலும், அதை தேர்தல் சமயத்தில் வாக்கு போடும்போது காட்ட வேண்டும். அது தான் சாமர்த்தியம். சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒருவரின் உயிரை எடுக்க ஆண்டவனை தவிர வேறு எந்தவொரு மனிதனுக்கும் அந்த உரிமை இல்லை. அதனால் பயங்கரவாதம் என்பது மிகவும் கண்டிக்கத்தக்க தவறான முடிவு. அது எப்போதும் எதிர்மறையான விளைவை மட்டுமே ஏற்படுத்தும்.
இந்த கொலை வழக்குகளில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின், இனி, இதுபோன்ற கொலைகள் நடக்க வாய்ப்பு இல்லை என, போலீசார் கருதினர்.ஆனால், ஜூன் 18ம் தேதி, சென்னை, அம்பத்தூர் மண்ணுார்பேட்டையில், இந்து முன்னணி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், ஏற்கனவே நடந்த கொலைகள் போலவே, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம், போலீசாரை அதிர்ச்சியடைச் செய்தது.இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, சென்னை பாடியைச் சேர்ந்த நசீர், கடலூர் காஜா மொய்தீன் மற்றும் பெங்களூரில் பதுங்கி இருந்த, நவாஸ், சாகுல் அமீது உள்ளிட்ட, 13 பேர் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

கூட்டாளிகள்:

அதில், 'இந்து பிரமுகர்களின் உயிருக்கு குறிவைத்து, புதிய அமைப்பு துவங்கி உள்ளோம். தமிழகம் முழுவதும், எங்களது கூட்டாளிகள், இந்து தலைவர்களின் உயிருக்கு, குறி வைத்து உள்ளனர்' என, தெரிவித்து உள்ளனர்.அதன் அடிப்படையில், கோவையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உயிருக்கு குறி வைத்த, சதாம் உசேன், நவுசத் உள்ளிட்ட நான்கு பேர், நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்திலும், இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைத்து, பயங்கர சதிவேலை நடப்பதாக தெரிவித்து உள்ளனர்.

தகவல் பரிமாற்றம்:

இந்த சதி திட்டத்திற்கான ஆணி வேரை கண்டுபிடித்தால் மட்டுமே, கொடூர கொலைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற முடிவுக்கு, போலீசார் வந்துள்ளனர். அதற்கான பணிகளிலும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.போலீசாருக்கு இடையே, போதிய தகவல் பரிமாற்றம் இல்லாததால், இந்த பணியில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைக்கப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாறுவேடத்திலும், அவர்களை பாதுகாத்து வருகிறோம்' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: