சனி, 16 ஆகஸ்ட், 2014

மலையாள திரை உலகம் மோகன்லால் அண்ட் கோ மாபியாக்களிடம் சிக்கி சீரழிகிறது ! வினயன் படத்துக்கு தடை ?



எனது படத்துக்கு பணியாற்ற வந்தவர்களை நடிகர் மிரட்டி விலக வைத்தார் என்று இயக்குனர் வினயன் புகார் கூறி உள்ளார்.தமிழில், ‘காசி‘, ‘என் மன வானில்‘ போன்ற படங்களை இயக்கியதுடன் பல்வேறு மலையாள படங்களை இயக்கி இருப்பவர் வினயன். இவருக்கும் மல்லுவுட் திரையுலக கலைஞர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இவரது படங்களுக்கு பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவதில்லை. இதனால் புதுமுகங்கள், பிரபலமில்லாத ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். தற்போது ‘லிட்டில் சூப்பர்மேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்கவிடாமல் தனக்கு இடைஞ்சல் செய்ததாக வினயன் கூறினார். அவர் கூறியதாவது:ஒரு வழியாக லிட்டில் சூப்பர் மேன் படத்தை எதிர்ப்புகளுக்கு இடையே முடித்திருக்கிறேன். ஷம்மி திலகன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் அவரை மல்லுவுட் நடிகர் சங்க தலைவர் இன்னொசென்ட் மிரட்டி விலகச் சொன்னார். அவரும் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதேபோல் இசை அமைப்பாளர் எம்.ஜெயசந்திரனை தொழிலாளர் சங்க நிர்வாகி பி.உன்னிகிருஷ்ணன் விலக வைத்தார். இதையெல்லாம் மீறி தற்போது படத்தை முடித்திருக்கிறேன்‘ என்றார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: