புதுடில்லி: பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேயே கட்ஜூ அடுத்தடுத்து
தகவல்களை வெளியிட்டு வருகிறார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி
கபாடியா, தான் பரிந்துரை செய்த வழக்கை நியாபகத்தில் கொண்டிருக்கவில்லை என
கூறி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர், ஊழல் நீதிபதி
மீது கபாடியா நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தது
குறிப்பிடத்தக்கது. இதனால் கோபமடைந்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறை
மீதான மரியாதையை சீர்குலைக்க முயற்சி நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் நேரடியாக வர வேண்டியதுதானே? எதற்கு
இந்த விளம்பரத் தந்திரம்? அரசியல்வாதிகளை கேள்வி கேட்பதென்றால் அனைத்து
அரசியல்வாதிகளையும் வெளிப்படையாகக் கேட்கவேண்டியதுதானே? ஒரு கட்சித் தலைவரை
மட்டும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தினால் எங்கோ இடிப்பதாகத்தானே
அர்த்தம். வழக்குகளைச் சந்திக்கத் திராணியற்றவர்கள் செய்யும் வேலை இது
என்பது அரசியலை நோக்குபவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவரும்
நீதித்துறையில் இருந்தவர் எனும்போது என்னத்தைச் சொல்வது? காலம் பதில்
சொல்லும்...
தனது பிளாக்கில் கட்ஜூ கூறியுள்ளதாவது, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியின் போன் பேச்சை, உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்டது தொடர்பான புகாரை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கபாடியா நினைவில் வைத்துக்கொள்ள மறந்து விட்டார்.ஒட்டுக்கேட்டது தொடர்பான ஆவணங்களை உளவுத்துறையினர் மற்றும் தலைமை நீதிபதி அலுவலக ஆவணங்களில் இருந்து கிடைக்கும். அலகாபாத் ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கபாடியாவுக்கு வந்தது. அலகாபாத் ஐகோர்ட்டில் பணியாற்றிய 5 நீதிபதிகள் மீதான புகார் குறித்து ஆதாரங்களை தாம் திரட்டி அனுப்பிய போதும், அவர்கள் மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த லகோத்தி நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் நீதித்துறை மீதான நம்பிக்கை கெட்டுவிடும் என தலைமை நீதிபதிகள் கருதியதாகவும் கூறியுள்ளார். மேலும். தகுதியில்லாத சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவரை, நீதிபதி தேர்வுக்குழுவில் இருந்த கபாடியா கொண்டு வந்தார் எனவும் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதிகோபம்: கட்ஜூவின் தொடர் புகார்களால் கோபமடைந்துள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆர்எம் லோத்தா கூறுகையில், நீதித்துறை மீதான மரியாதையை சீர்குழைக்க முயற்சிநடைபெற்று வருகிறது. நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம். கொலீஜியம் முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் நீதிபதிகள் குழுவில் நான் தேர்வு செய்யப்பட்டேன், நீதிபதி நாரிமன் கடைசியில் தேர்வு செய்யப்பட்டார். கொலிஜியம் முறை தோல்வியடைந்தால், நாம் அனைவரும் தோல்வியடைந்தவர்கள் என கூறியுள்ளார்.
கட்ஜூவின் குற்றச்சாட்டுகளுக்கு மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துலசி ஆதரவு தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தேர்வு செய்யும் கொலீஜியம் முறையை ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது என கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக