வெள்ளி, 25 ஜூலை, 2014

கலைஞர் :நீதிபதி கட்ஜு சொத்துக் கணக்கு என்ன? இவர் புகழ்ந்த ஜெயலலிதாவின் சொத்துக் கணக்கு என்ன?

சென்னை:''நீதிபதி அசோக்குமார், என்னை, 'ரிமாண்ட்' செய்தது தான் உண்மை; ஜாமினில் விடுவிக்கவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:என் சொத்து கணக்கு திறந்த புத்தகம். நான் ஐந்து முறை முதல்வராக இருந்தவன். திரைக்கதை, வசனம், 70 படங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள தெரு வீடு தான். இந்தியாவில் உள்ள எந்த முதல்வரும், இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாக தெரியவில்லை.இந்த வீட்டை கூட எனக்கு பின், என் மனைவிக்கு பின், பொதுச் சொத்தாக்க, அறக்கட்டளைக்கு எப்போதோ எழுதிக்கொடுத்து விட்டேன். நீதிபதி கட்ஜு சொத்துக் கணக்கு என்ன? இவர் புகழ்ந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் கணக்கு என்ன? சொத்துக் குவிப்பு வழக்கு என் மீதா நடக்கிறது?நீதிபதி அசோக்குமார், என்னை ஜாமினில் விடுவித்தார் என்பதற்காக, அவருக்கு, நான் பல வகைகளிலும் பரிந்துரை செய்ததாக சொல்லியிருக்கிறார்.

நீதிபதி அசோக்குமார், என்னை ஒரு வழக்கில் ஜாமினில் விடுவித்தார் என்பது உண்மையல்ல. என்னை 'ரிமாண்ட்' செய்தார் என்பது தான் உண்மை.மேலும், நான் அப்போது ஜாமினே கோரவில்லை. காரணம், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வகையில், நான் சிறையில் இருக்க விரும்பினேன். மிகத்தெளிவான சரியான, நடந்து விட்ட உண்மைகளை கலைஞர் சொல்லியிருக்கிறார். காமாலை கண்ணர்களுக்கு இதுவும் மஞ்சளாகவே தெரியும்.


என்னை கைது செய்ததால், ஜெயலலிதா அரசுக்கெதிராக, தமிழகமே கொந்தளித்ததால், ஒரு சில நாட்களில் அரசே என்னை சிறையிலிருந்து விடுவித்து விட்டது.அதனால், நான் ஜாமின் கேட்க வேண்டிய அவசியமே எழவில்லை. ஒரு நீதிபதியாக இருந்தவர், இந்த விவரங்களை எல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அவசர கதியில் என் மீது மறைமுகமாக பெரிய குற்றச் சாட்டை சுமத்தியிருக்கிறார்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார் dinamalar.com

கருத்துகள் இல்லை: