காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வையற்றோர் பள்ளியில்
படிக்கும் மூன்று சிறுவர்களை, ஆசிரியர் பிரம்பால் மிருகத்தமான தாக்கும்
வீடியோ வெளியாகி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், 'கிரீன்பீல்டு ரெசிடென்ஷியல் பள்ளி' என்ற பெயரில், பார்வை திறன் அற்ற மாணவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. இதில், 62 மாணவர்கள் தங்கி, படிக்கின்றனர். இங்கு படிக்கும், 10 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்களை, அந்த பள்ளியின் ஆசிரியர், பிரம்பால் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ, நேற்று வெளியானது. அதில், சிறுவர்களின் தலையை ஒரு கையால் பிடித்து கீழே குனிய வைத்து, மற்றொரு கையால், அந்த ஆசிரியர், பிரம்பால் விளாசும் காட்சியும், பார்வையற்ற அந்த சிறுவர்கள் விட்டு விடும்படி, கதறும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சிறுவர்களை அடிப்பதற்கு, ஆசிரியருக்கு மற்றொரு நபர் உதவும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
அந்தச் சிறுவர்களைத் தாக்கும் மிருகம் நடந்து கொள்வதைப் பார்த்தால் இவன் பிறவியிலேயே கொடும் மிருகத் தனத்துடன் பிறந்தவன் போலவே இருக்கிறது.இது ஒன்றுதான் வெளி வந்துள்ளது.இதுபோல முன்பு எத்தனையோ? தீர விசாரித்தால் நிறைய விஷயங்கள் வெளிவரும் என்பது உறுதி.
அந்த ஆசிரியரும், பார்வையற்றவர் என, கூறப்படுகிறது. நேற்று, அனைத்து 'டிவி' சேனல்களிலும், இந்த கொடூர காட்சி ஒளிபரப்பாகி, பார்ப்பவர்களின் மனதை பதற வைத்தது.இதையடுத்து, அந்த முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாவும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும், காக்கிநாடா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக