சென்னை: புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டூடியோ அமைந்துள்ள இடத்தை ஸ்ரீராம்
குரூப்பிற்கு ரூ.400 கோடிக்கு விற்பனை செய்ய ஏ.வி.மெய்யப்பனின் மகனான
பாலசுப்பிரமணியத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
சென்னை வட பழனியிலுள்ளது ஏ.வி.எம். ஸ்டூடியோ. ஏ.வி.மெய்யப்பனால்
அமைக்கப்பட்டது. சிவாஜி கணேசன், கமலஹாசன் உட்பட பல நட்சத்திரங்களை தமிழ்
திரையுலகத்திற்கு தந்தது ஏ.வி.எம். ஸ்டூடியோ. 6.5 ஏக்கர் பரப்பளவில்
விரிந்து காணப்படும் ஸ்டூடியோவின் சந்தை மதிப்பு தற்போது எகிறியுள்ளது.
ஏவிஎம் ஸ்டூடியோவை ரூ.400 கோடிக்கு வாங்குகிறது ஸ்ரீராம் புராப்பர்டீஸ்?
ஸ்டூடியோ அமைந்துள்ள பகுதியில் 7 லட்சம் சதுர அடி பரப்பில் அடுக்குமாடு
குடியிருப்பு கட்ட ஸ்ரீராம் புராப்பர்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்
திட்டமிட்டுள்ளது. எனவே ஏ.வி.எம். ஸ்டூடியோவை விலைக்கு வாங்க ரூ.400 கோடி
பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.வி.எம். ஸ்டூடியோவின் பாதி நிலத்தை ஸ்ரீராம் புராப்பர்டீஸ் தனித்தும்,
எஞ்சிய பாதி நிலத்தை மெய்யப்பனுடன் சேர்ந்தும் மேம்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முதல்கட்டமாக ரூ.180 கோடி பரிவர்த்தனை
நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட டீலுக்கான கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
இந்த பரிவர்த்தனை காரணமாக ஸ்டூடியோவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை
என்றும், ஸ்டூடியோவின் கூட்டாளிகளில் ஒருவராக ஸ்ரீராம் புராப்பர்டீஸ்
மாறும் என்றும் தெரிகிறது. இந்த தகவல் குறித்து கருத்து கூற ஸ்ரீராம்
புராப்பர்டீஸ் மறுத்த நிலையில், பாலசுப்பிரமணியன் வெளியூர் சென்றுள்ளதாக
தகவல் கிடைத்தது
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக