கே.மணிகண்டன் சுனிதா சேகர்
மெட்ரோ ரயில் திட்டப் பாதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மகிழ்ச்சியில் மூச்சே நின்று விடும் அளவுக்கு மலைப்பாக இருக் கிறது. உயர்ந்த தூண்கள் மீது அமைக் கப்பட்டுள்ள ரயில் பாதைத் தடம், சட்டை உரித்த நீண்ட பாம்பு போல வளைந்து வளைந்து செல்கிறது. அப்படிப் போகிற வழியில் சென்னை மாநகரின் வடக்கையும் தெற்கையும், மாநகரின் மையப்பகுதி வழியாக அற்புத மாய் இணைக்கிறது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (தந்தை பெரியார் சாலை), உள்வட்டச் சாலை ஆகிய பிரதான சாலைப் பகுதிகளும் மெட்ரோ ரயில் சேவையைப் பெறுகின்றன. நல்லவேளை இதுவும் திமுக கொண்டுவந்த திட்டம் என்று கிடப்பில் போடாமல் விட்டாரே நம்ப அம்மா
மெட்ரோ ரயில் திட்டப் பாதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மகிழ்ச்சியில் மூச்சே நின்று விடும் அளவுக்கு மலைப்பாக இருக் கிறது. உயர்ந்த தூண்கள் மீது அமைக் கப்பட்டுள்ள ரயில் பாதைத் தடம், சட்டை உரித்த நீண்ட பாம்பு போல வளைந்து வளைந்து செல்கிறது. அப்படிப் போகிற வழியில் சென்னை மாநகரின் வடக்கையும் தெற்கையும், மாநகரின் மையப்பகுதி வழியாக அற்புத மாய் இணைக்கிறது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (தந்தை பெரியார் சாலை), உள்வட்டச் சாலை ஆகிய பிரதான சாலைப் பகுதிகளும் மெட்ரோ ரயில் சேவையைப் பெறுகின்றன. நல்லவேளை இதுவும் திமுக கொண்டுவந்த திட்டம் என்று கிடப்பில் போடாமல் விட்டாரே நம்ப அம்மா
அளவு, முதலீட்டில் முதலிடம்
சென்னை மாநகரின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்ய இதுவரை
நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங் களிலேயே இதுதான் அளவிலும் முத லீட்டிலும்
முதலிடத்தைப் பிடிக்கிறது என்பதுடன் டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய
பெருநகரங்களுக்கு இணையாக சென்னைவாசிகளும் பெரு மைப்படத்தக்க விதத்தில்
அமைந் திருக்கிறது. இதுநாள்வரை சென்னைப் பெருநகர பஸ்களில் இடித்து,
நெரித்து நின்றுகொண்டும், படிக் கட்டுகளில் தொங்கிக்கொண்டும்
பயணித்தவர்களுக்கு வானில் புஷ்பக விமானத்திலும் தரைக்கடியில் வெள்ளிப்
பெட்டிகளிலும் பயணிக்கும் அனுபவத்தைத் தரப்போகிறது.
சென்னை நகர மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் தரப்போகும் பெருமை யுடன்
போனஸாக, சென்னை நகர்ப்புற நிலங்களின் மதிப்பையும் பலமடங்கு கூட்டப் போகிறது
மெட்ரோ ரயில். இனி மெட்ரோ ரயில் பாதையை ஒட்டிய இடங்களை வாங்க வேண்டு
மென்றாலும் வாடகைக்குக் குடியேற வேண்டுமென்றாலும் இப்போதிருப் பதைவிட பல
மடங்கு முதலீடு செய் தாக வேண்டும். 32 மெட்ரோ ரயில் நிலை யங்களுக்கு
அருகில் ஏற்கெனவே அமைந்துள்ள, இனி அமையப்போகும் வர்த்தக நிறுவனங்கள்
இன்னும் அதிகம் களைகட்டும்.
சென்னை நகரின் புறநகர்ப் பகுதி களில் வசிப்பவர்களுக்கும் நகரின் மையப்
பகுதியில் தொழில், வர்த்தக, சேவைப் பிரிவுகளில் வேலை பார்ப்ப வர்களுக்கும்
இந்த திட்டத்தால் பல நன்மைகள் ஏற்படப்போகின்றன என்று கட்டுமானத் தொழிலில்
இருப்பவர்களும் சந்தைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்களும்
தெரிவிக்கின்றனர்.
புறநகர்களின் நிலை மாறும்
புறநகர்ப் பகுதிகளில் இருந்து சென்னையின் மையப் பகுதிகளுக்கு எளிதாக,
விரைவாக வந்துவிட முடியும் என்பதால் இந்த ரயில் பாதை யில் உள்ள புறநகர்ப்
பகுதிகளில் வீடுகள், அடுக்ககங்களை வாங்க நடுத்தர மக்கள் இனி முன்னுரிமை
தருவார் கள் என்பது அவர்களது கணிப்பு. நகரின் மையப் பகுதியில் அலுவலகம்,
கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்காக ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு, யாரும்
சரியாக குடிவராத பகுதிகளுக்கு மவுசு கூடும்.
கட்டுமானத் தொழிலுக்கு தொடர் வருமானத்தையும் நிலைத்தன்மை யையும் மெட்ரோ
ரயில் தரப்போகிறது என்கிறார் இண்டியா ரெசிடென்ஷியல் நிறுவனத்தின் தலைவர்
ஏ.எஸ்.சிவராமகிருஷ்ணன்.
புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்றால், உரிய நேரத்துக்கு அலுவலகத்துக்கு
வரமுடியாதே என்று அஞ்சி, இது வரை சென்னை நகரின் மையப் பகுதியி லேயே
புழுக்கத்திலும் புறாக்கூண்டு வீடுகளிலும் அடைபட்டுக்கிடந்த பலர், இனி
விட்டு விடுதலையாகி விரும்பிய இடத்தில் மனையோ, அடுக்ககமோ வாங்கி
சொந்தமாக்கிக்கொண்டு அங்கிருந்தே வசதியாக அலுவல கத்துக்கு வந்துபோக
ஆரம்பிப்பார்கள் என்கிறார் கிரீன் ட்ரீ ஹோம்ஸ் நிறுவனத் தின் இயக்குநர்
தினேஷ் எதிராஜ்.
மவுன்ட் ரோடுக்கு மீண்டும் மவுசு
ஒரு காலத்தில் திருமண பட்டுப் புடவைகள், வேட்டி துணிமணிகள், பேன்ட், ஷர்ட்
வாங்க மவுன்ட் ரோடுக்கு (அண்ணா சாலை) போவது தான் வழக்கமாக இருந்தது. இடைக்
காலத்தில் இந்த மகத்துவத்தை தி.நகர் கைப்பற்றியது. இப்போது வசதி யான
போக்குவரத்து இருப்பதால் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணா சாலை
பகுதிகளுக்கு பழைய மகத்துவமும் வாடிக்கையாளர் வருகையும் அதிகரிப்பதற்கு
வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்கிறார் சஞ்சய் சுக். ஜோன்ஸ் லாங் லாசாலே
நிறுவனத்தின் குடியிருப்பு சேவைப் பிரிவுகள் துறைத் தலைவர் இவர்.
ஒரு காலத்தில் திருமண பட்டுப் புடவைகள், வேட்டி துணிமணிகள், பேன்ட், ஷர்ட்
வாங்க மவுன்ட் ரோடுக்கு (அண்ணா சாலை) போவது தான் வழக்கமாக இருந்தது. இடைக்
காலத்தில் இந்த மகத்துவத்தை தி.நகர் கைப்பற்றியது. இப்போது வசதி யான
போக்குவரத்து இருப்பதால் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணா சாலை
பகுதிகளுக்கு பழைய மகத்துவமும் வாடிக்கையாளர் வருகையும் அதிகரிப்பதற்கு
வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்கிறார் சஞ்சய் சுக். ஜோன்ஸ் லாங் லாசாலே
நிறுவனத்தின் குடியிருப்பு சேவைப் பிரிவுகள் துறைத் தலைவர் இவர்.
மெட்ரோ ரயில் சேவை அளிப்பவர்கள் இப்போதைய பகுதிகளுடன் நின்று விடாமல்
பெரும்புதூர், குன்றத்தூர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; மெட்ரோ
ரயில் சேவைப் பகுதியை சென்னை கடற்கரை வேளச்சேரி வரை யில் இயக்கப்படும்
பெருநகர விரைவு ரயில்பாதை திட்டத்துடனும், ஏற்கெனவே இயங்கிவரும் புறநகர்
ரயில் சேவைப் பிரிவுடனும் இணைக்க வேண்டும். சென்னை மாநகர பஸ், மினி பஸ்
ஆகியவற் றுடனும் மெட்ரோ ரயில் சேவையை ஒருங்கிணைத்து நடத்தினால் மாநகர
போக்குவரத்துப் பிரச்சினை கணிசமாகக் குறையும் என்கிறார் கிளியர் எஸ்டேட்
நிறுவனத்தின் சுந்தர்ஜி நந்தகோபால்.
அபார வளர்ச்சி
ஜி.எஸ்.டி சாலை
ஆதம்பாக்கம், பல்லாவரம் பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டங்கள் வேகம் பெறும்.
உள்வட்டச் சாலை
மேற்கு மாம்பலம், கே.கே.நகர் பகுதிகளில் சிறிய எண்ணிக்கையிலான அடுக்ககங்களின் கட்டுமானம் அதிகரிக்கும்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை
அண்ணா நகர், அயன்புரம் (அயனாவரம்) பகுதிகள் இணைப்புப் பெறுவதால் நிலமதிப்பு உயரும்.
வட சென்னை
வட சென்னையில் புதிய அடுக்ககங்கள், வீடுகட்டும் திட்டங்கள் மீட்சி பெறும்.
‘விதிகளைத் தளர்த்தினால் குடியேற்றம் அதிகரிக்கும்’
மெட்ரோ ரயில் நிலையப் பாதை நெடுகிலும் புதிதாகக் கட்டிடம் கட்ட விதிக்கப்
பட்டுள்ள நிபந்தனைகளைத் தளர்த்து மாறு உரிய அமைப்புகளுக்கு வேண்டு கோள்
விடுக்கப்பட்டுள்ளது.
நிலப் பரப்புக்கும் அதில் கட்டிடம் எழுப்பப்படும் பரப்புக்கும் உள்ள
விகிதமான தரைதளக் குறியீட்டை (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) மேலும் சிறிது
அதிகரித்து அனுமதித் தால், இப்போதுள்ள அடுக்க கங்களில் அதிகம்பேர் வசிக்க
வழி ஏற்படும். சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழுமம் இந்த அனு மதியை
வழங்கினால் ரயில் பாதை நெடுகிலும் வீடுகளும் குடியி ருப்பவர்கள்
எண்ணிக்கையும் அதி கரிக்கும். மெட்ரோ ரயில்களை பயன் படுத்துவோர்
எண்ணிக்கையும் கணி சமாக உயரும் என்று கூறப்படுகிறது.
‘‘மெட்ரோ ரயில் செல்லும் பாதைக்கு 500 மீட்டர் (சுமார் 1500 அடி) தொலைவில்
இரு பக்கமும் வீடுகள், அடுக்ககங்களுக்கான தரைதளக் குறியீட்டை இப்போதுள்ள
1.5 என்ற அலகில் இருந்து உயர்த்துமாறு பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். இது
விரைவில் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று அதிகாரி ஒருவர்
நம்பிக்கை தெரிவித்தார்.
அனுமதி வழங்கும்போது மனை யின் பரப்பளவுக்கு ஏற்ப மக்கள் எண் ணிக்கை
அனுமதிக்கப்பட வேண் டும் என்று எச்சரிக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின்
கட்டிடக்கலை, திட்டமிடல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்
எஸ்.பி.சேகர்.
இல்லாவிட்டால் நெரிசல், வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாமை, அவசர
காலத்தில் மீட்பு, உதவிப் பணிகளுக்குச் செல்வ தில் சிக்கல் போன்றவை ஏற்படக்
கூடும் என்கிறார்.
என்னதான் கட்டுப்பாடுகள் விதித் தாலும் அடுக்ககங்கள் இருக்கும் பகுதிகளில்
நெரிசல் ஏற்படுவது இயல்பு என்கிறார் அகமதாபாத் சி.இ.பி.டி.
பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த சிவானந்த
சுவாமி. அகமதாபாதில் விரைவுப் பேருந்து களுக்கான தனி தடங்கள் ஏற்படுத்தப்
பட்ட பிறகு அந்த சாலை நெடுகிலும் நிலத்தின் மதிப்பும் உயர்ந்தது.
கட்டிடங்களும் பெருகின என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக