பெங்களூர் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட
சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம்
செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்
முஸ்தப்பா அதே பள்ளியில் படிக்கும் மேலும் 4 சிறுமிகளை பலாத்காரம்
செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முன் பணிபுரிந்த பள்ளியிலும்
சிறுமிகளிடம் அத்துமீறி நடந்த அவன் சிறுமிகளை புகைப்படம் எடுப்பதையும்
வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது முஸ்தப்பாவிடம் இருந்து
கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற ஏராளமான காட்சிகளும்
பதிவாகியிருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாத சம்பளமாக
ரூ.18,000 பெரும் முஸ்தப்பா விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் என
ஏராளமான பொருட்களை வாங்கி குவித்திருப்பதால் குழந்தைகளை வன்கொடுமை செய்து
ஆபாச படம் எடுக்கும் கும்பலுடன் அவனுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் நடந்த பள்ளி முன்பு பாரதிய ஜனதாவின் மாணவர் அணி ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை தாண்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டினர். பலாத்கார சம்பவத்தில் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூடத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்வது மட்டும் தீர்வாகாது எனக் கூறியுள்ள அவர்கள் பள்ளி நிர்வாகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக