சென்னை: நான்கு இளம் பெண்களுடன் ஆபாச கோலத்தில் சாமியார் ஒருவர்
உள்ளபடி சித்தரிக்கப்பட்டுள்ள சொர்க்கம் என் கையில் என்ற படத்துக்கு தடை
கோரியுள்ளது ஒரு இந்து அமைப்பு.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இந்து தர்மா சக்தி அமைப்பு சென்னை
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சொர்க்கம் என் கையில்' என்ற
தமிழ் திரைப்படம் குறித்த விளம்பரத்தைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சி
அடைந்தோம்.
பெண்களுடன் ஆபாச கோலத்தில் சாமியார் - படத்துக்கு தடைகோரி வழக்கு
அதில் இந்து சாமியார் ஒருவர், ஆபாச உடையணிந்த நான்கு பெண்களுடன் இருப்பது
போன்ற படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் காவி உடை அணிந்திருப்பது
போன்றும் படம் வெளியிடப்பட்டுள்ளது.
இது, இந்து மத ரீதியாக பாதிப்பைப் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தை எல்லா மக்களும் பார்க்கவேண்டும் சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கப்பா
காவி அணிந்த இந்து சன்னியாசிகள், ஒழுக்கத்துக்கு மாறாகவும், சட்ட விரோதமாகவும், நேர்மையில்லாத செயல்களில் ஈடுபடுவர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. கன்னடத்திலிருந்து சுவாமி சத்தியானந்தா என்ற இந்த படத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்து, "சொர்க்கம் என் கையில்' என்ற பெயரில் மதன் பட்டேல் என்பவர் திரையிட உள்ளார். அதனால், இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்," என கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தணிக்கைக் குழுவுக்கும் பட நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
/tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக