திங்கள், 21 ஜூலை, 2014

சந்திரபாபு நாயுடு : கங்கை முதல் காவிரி வரை இணைக்கப்படவேண்டும் Expert backs Ganga-Cauvery link

அய்தராபாத், ஜூலை 16_ நாட்டின் விவசாய துறை வளர்ச்சிக்கும், வெள்ளத் தால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும் தேசிய நதிகள் இணைப்பு திட்டம் அவசியமானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுளளார்.
முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், பிரபல பொறியாளருமான மறைந்த கே.எல்.ராவின் 112 ஆவது பிறந்தநாள் விழா நேற்று அய்தராபாத் தில் நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:
தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் கே.எல்.ராவ். அவரது கனவை நிறைவேற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் மாபெரும் மரி யாதையாகும். வாஜ்பாய் தலைமையி லான கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, நதிகள் இணைப்பு திட்டத்துக்காக செயற்குழு அமைக்கப்பட்டது.
ஆனால், அடுத் ததாக அமைந்த அய்மு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது பிரதமர் மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசில் மீண்டும் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. எனவே இந்த அரசில், நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமாகக் கூடும் என நம்புகிறேன். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், விவசாய துறை வளம் பெறவும் கங்கை முதல் காவிரி வரையிலான நதிகளை இணைப்பது அவசியம்.
போலாவரம் பாசன நீர் திட்டம்
போலாவரம் பாசன நீர் திட்டம் பல்வேறு பலன்களை அளிக்கக் கூடியது. இத்திட்டத்துக்காக, இடம் பெறக்கூடிய மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நியாயமான முறையில் அரசு செய்து தரும் என உறுதி அளிக்கிறேன். வறட்சி மாநில மாக உள்ள ஆந்திராவின் நிலை மாற போலாவரம் பாசன நீர் திட்டம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்..viduthalai.in/  Maharashtra has missed the bus as far as the proposed national river-linking project is concerned, but the state should throw its weight behind the Ganga-Cauvery link as it may benefit its citizens, said engineering consultant R C Mahulkar here on Sunday.

"The river-linking project has been on hold for too long. It is important that the project is initiated now. If the government takes up the Ganga-Cauvery link on a priority basis, it will solve water issues in Andhra Pradesh, Karnataka and Tamil Nadu, which will allow Maharashtra to re-negotiate sharing of water from the Krishna and Godavari rivers," Mahulkar said at a function organized by the Maharashtra Pollution Control Board and the Environment Club of India.

Mahulkar said he will be requesting the Union government to take up the project on a priority basis. According to the draft proposal for the project, that was prepared in 2002, Maharashtra has little to gain from the project directly, but the state should not raise any objections, he said.

கருத்துகள் இல்லை: