சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள்.
வருவாய்த் துறை அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பில்
இருந்து நீக்கக் கோரி, பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக
உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவைக் கூட்டத் தொடரில் இதுவரை நான்கு முறை வெளியேற்றப்பட்ட காரணத்தால் நிகழ் கூட்டத் தொடரின் எஞ்சிய நாள்களில் அவர்கள் பங்கேற்க முடியாது என அறிவித்தார். திமுக காரய்ங்க எதிர்கட்சியா கூட இல்லை , அப்புறம் ஏன் அவிய்ங்களை பாத்து பயப்படூரீக ? ஏதோ அவிய்ங்க ஆளுங்கட்சி மாதிரி போஸ் கொடுக்கிராக , நீங்க என்னடான்னா அம்மா ஆத்தான்னு பலியாடுக மாதிரி ஜெயா முன்னாடி வேர்த்து நடுங்குரீக , உங்க அடிமை வாழ்க்கையை பாத்தா உங்க சம்சாரம் குழந்த குட்டிக உங்கள மதிக்குமா? இந்த பிழைப்பு தேவையா ? தூத் தேரி !
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், தமிழகத்தின் சில பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயிகளிடையே எழுந்துள்ள நிலை குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார். அப்போது, தமிழகத்தை சுனாமி தாக்கியபோது, அந்தச் சுனாமியை விட வேகமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா.
ஆனால், திமுகவினர் சுனாமி தாக்கியபோது ஓடி ஒளிந்தனர். அவர்களது ஆட்சிக் காலத்தில் வறட்சிக்காக வெறும் ரூ.24 கோடி மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அமைச்சரின் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்வரிசையில் இருந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவைத் தலைவரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். இதனால் பேரவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதால், அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று பதில் குரல் எழுப்பினர்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இருக்கைக்குச் செல்லும்படி பேரவைத் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அவர்கள் குரல் எழுப்பியபடியே இருந்தனர். இதைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பேரவையில் இருந்து வெளியேற்றும்படி பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். பேரவைத் தலைவரின் உத்தரவுக்குப் பிறகும் திமுக எம்.எல்.ஏ.க்களில் சிலர் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பேரவையின் லாபியில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். அவர்கள் எழுப்பிய கோஷங்கள் பேரவைக்குள் கேட்டதால், லாபியில் இருந்தும் வெளியேற்றும்படி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
திமுகவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. திமுகவினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி மார்க்சிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விடுத்த வேண்டுகோளை பேரவைத் தலைவர் ஏற்க மறுத்தார்.
இதன்பின், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு இடையே பேரவைத் தலைவர் தனபால் வெளியிட்ட உத்தரவு:
திமுக உறுப்பினர்கள் வேண்டுமென்றே, திட்டமிட்டு பேரவைத் தலைவரின் உத்தரவையும் மீறி இருக்கைக்கு அருகே வந்து குழுவாக அமர்ந்து கொண்டு, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தனர். பேரவைத் தலைவரை கைநீட்டி பேசிக் கொண்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தனர். இதனால், வெளியேற்றப்பட்டனர்.
இந்தக் கூட்டத் தொடரில் நான்காவது முறையாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரவை விதி 120-இன் கீழ் ஒரு உறுப்பினர் இரண்டு முறைக்கு மேல் வெளியேற்றப்பட்டால், அவர் அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது.
திமுக உறுப்பினர்கள் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டபோது இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது என அறிவித்திருக்கலாம். ஆனால், அவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டது.
எனினும் தொடர்ந்து வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்து கொண்டு நான்காவது முறையும் வெளியேற்றப்பட்டுள்ளதால் திமுக உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக