டெல்லி மேல்–சபையில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் புதிய சட்டம் இயற்றுவதில் சிக்கல் ஏற்படும்.
நமது பாராளுமன்றம் லோக்சபா (மக்களவை) ராஜ்யசபா (மாநிலங்களவை) என இரு சபைகளைக் கொண்டது. பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் எண்ணிக்கை 543, அதே போல் ராஜ்ய சபா (மேல் சபை) எம்.பிக்கள் எண்ணிக்கை 240.
பாராளுமன்ற எம்.பிக்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்கிறார்கள். மேல்–சபை எம்.பிக்களை மாநில வாரியாக 9 எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்கிறார்கள்.
மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற வேண்டும். அப்போதுதான் அது நடைமுறைக்கு வரும்
இப்போது பாராளுமன்றத்தில் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றாலும் மேல்–சபையில் அந்த கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை.
பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ் எம்.பிக்களின் பலம் 68 ஆக உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு 46 எம்.பிக்கள் உள்ளனர்
மேல்–சபையில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற 121 எம்.பிக்கள் ஆதரவு தேவை. மேல்–சபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. மேல்–சபையில் ஒவ்வொரு முறையும் பாரதீய ஜனதா நெருக்கடி கொடுத்து வந்தது. அப்போது அதே நிலை பாரதீய ஜனதாவுக்கு உருவாகும் சூழல் எற்பட்டு உள்ளது.
மேல்சபையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த காங்கிரசின் பலம் 78 ஆகவும், பாரதீய ஜனதாவின் பலம் 61 ஆகவும் இருக்கும். இதர கட்சிகளின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது.
2015ம் ஆண்டுக்குள் இன்னும் சில மாநிலங்களில் இருந்து காலியாகும் எம்.பிக்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. அது காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் பாரதீய ஜனதாவின் எண்ணிக்கை உயர வாய்ப்பு இல்லை.
காங்கிரஸ் அரசு மேல்–சபையில் சில மசோதாக்கள் கொண்டு வந்த போது அதற்கு 102 எம்.பிக்கள் ஆதரவுதான் கிடைத்தது. இதனால் 68 மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்தன.
மேலும் நீதித்துறை நியமனங்கள், மருந்து மற்றும் அழகு பொருட்கள் சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 60 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிறைவேறாமல் நிலுவையில் கிடக்கிறது.
எனவே பா.ஜனதா கொண்டு வரும் சட்டம் நிறைவேற வேண்டுமானால் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆதரவை அக்கட்சி நாடும். அந்த அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் பகையை மறந்து தனது முன்னாள் கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜனதா வலை விரிக்கிறது.
டெல்லி மேல்–சபையில் அ.தி.மு.க.வுக்கு 10 எம்.பிக்கள் உள்ளனர். பிஜூ ஜனதா தளம் கட்சியில் 6 எம்.பிக்களும் உள்ளனர். சுயேச்சைகள் 9 பேர், நியமன எம்.பிக்கள் 9 பேர் உள்ளனர். இவர்களின் ஆதரவை பா.ஜனதா திரட்டும். malaimalar .com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக